பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö台 இந்திய விடுதலைப் போராட்டத்தில், பெண்களுக்கும் சமபங்கு இல்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க, -பங்கு பெற்றதே நம் போராட்டத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தது. அரசியல் விடுதலையை அடித்தளமாகக் கொண்டு எழுப்ப வேண்டிய சமுதாய சமத்துவமும், எல்லார்க்கும் வாழ்வளிக்கும் பொருளியலும், இன்னும் படுத்துக் கிடக் கின்றன. இவற்றை என்று காண்போம் என்று ஏக்கப் பெருமூச்சு விடும் நிலையிலேயே நாம் உள்ளோம். எத்தனை தூரமோ பண்டரிபுரம்? என்று முன்னொரு நாள் பக்தர் ஏங்கியதுபோல், நாம், எத்தனை தூரமோ வாழ்வூர்? எத்தனை தூரமோ சவத்துவ புரி?’ என்று ஏங்கித் தவிக்கிருேம். என்றைக்குத் தேவையான பொது இயக்கங்களில், பெண்கள் ஏராள மாகப் பங்கு கொள்கிருர்களோ, அன்றே, நாம் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைப்போம். எனவே, "துன்ப நீக்குஞ் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை மாதரசே யெங்கள் சாதி செய்த தவப்பயன் வாழிநீ’ மாதர்க்குண்டு சுதந்திர மென்றுகின் வண்மலர்த் திரு வாயின் மொழிந்தசொல் மேன்மை செய்தெமைல் காத்திடச் சொல்வதாம்.' என்று பெண்ணுரிமையைப் போற்றி வளர்ப்போ IDЛГQN .