பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 வீட்டினி லெம்மிடங் காட்ட வந்தாரதை வெட்டி விட்டோ மென்று கும்மியடி’ என்று சுதந்தர உணர்வுடன் நிமிர்ந்து பாடவும் கற்றுக் கொடுக்க வேண்டும். "நல்ல விலைகொண்டு நாயை விற்பாரந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ? கொல்லத் துணிவின்றி நம்மையு மங்கிலை கூட்டி வைத்தார் பழிசுட்டி விட்டார்’ என்று பாரதியின் பெண் பாடும்போது, நாம் எப்படி மறுக்க முடியும்? இதுவன்ருே உண்மை நிலை. பழகிப் போனதால், அநீதி, நீதியாகிவிடாது. இந்நிலை சரிவதற்கு, நாமும் துணை நிற்றல், கடமை. வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடு வோம்’ என்று, உங்கள் வீட்டுப் பெண்ணே முழங்கிலுைம், முழங் காமல் முடித்தாலும் வேதனைப்பட வேண்டாம். பொங்கி எழவேண்டாம். விரட்டவும் வேண்டாம்; விலகி நிற்கவும் வேண்டாம். ஏன்? மூத்தோர் அரவணைத்து, புதுவழியில் செல்ல ஆதரவு தரும்போது, தீமை விளையாது. நன்மையே விளையும், நேர் பார்வையில் வளரும் பயிர்போல. எனவே, வளரும் புதிய தலைமுறைப் பெண்கள்,

  • காத லொருவனைக் கைப்பிடித்தே அவன்

காரியம் யாவினுங் கைகொடுத்து மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி'