பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 என்று நிமிர்ந்து நின்று கும்மி அடிப்பது வரட்டுப்பேச்சல்ல; வெற்றுரை அல்ல; உறுதி முழக்கமாகும். அந்நிலையில், "பட்டங்க ளாள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் கடத்த வந்தோம் எட்டு மறிவினி லானுக்கிங் கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’ கும்.மியடிப்பது, கற்பனையாக இராது. வாழ்க்கை முறையாக உருவாகிவிடும். அப்போது வீட்டின் கதி யென்ன? இக் கேள்விக்குப் பதில் இதோ: சாதம் படைக்கவுஞ் செய்திடுவோம்-தெய்வச் சாதி படைக்கவுஞ் செய்திடுவோம்" என்று புதுமைப்பெண் கும்.மியடிப்பதைக் கண்டு மகிழ் வோம். சமைப்பதற்கே நேரம் எல்லாம் என்பது, தெரி யாத காலத்து வாழ்வு. பாரதி உருவகப்படுத்தும் பெண், கவர்ச்சிக்காக மட்டு மல்ல காதலனைத் தேடிக்கொள்ளுவது. அவள், பொறுப் புள்ள மனைவி; நம்பிக்கைக்கு உரிய குடிமகள்: கடமை உணர்வுள்ள அக் குல மகள், வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று பெருமிதத்துடன் கும்.மியடிக்கட்டும். காலத்தின் தேவை, புதுப் புதுநெறிகள்; குறுகிய நீதி களுக்குப் பதில், தொல்லுலக மக்களெல்லாம் வாழும் புதிய நீதிகள். உயிரை ஏற்று, உயிரைக் காத்து வைத்திருந்தது, உயிரை வெளிப்படுத்தும் தாய்க்குலத்திற்கே, புதிய நெறி களை வகுக்கும் பொறுப்பு அதிகமாக உண்டு. ஆகவே, கண்ணக் காக்கு மிரண்டிமை போலவே காத லின்பத்தைக் காத்திடு வோமடா!