பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ነ ፩ என்னும் மகாகவி பாரதியின் பாட்டிற்குத் தாளம் போடு வோம். போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் ஒன்று பொற்குழ லுதடா இது நாம் அனைவருக்கும் இடப்பட்ட ஆன. அவரை அவரை, அவரைக் கைகாட்டிவிட்டு, எங்கோ ஒடிமறைந்து விடுதல் ஆகாது. பெண்ண றத்தினை யாண்மக்கள் வீரக்தான் பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை’ இதைத் தியானிப்போம். நாள்தோறும் தியானிப் போம். கடமையிலே ஒழுக்கத்திலே உறுதியாக ஊன்று வோம். "கலமான வீட்டைச் சுட்டால் கூரையுந்தான் எரிந்திடாதோ' ஆண்கள் கற்புநிலை தவறினால், பெண் குலம் எப்படி அதைக் காக்கும்? எவரும் கெடுவதற்கு, கெடுப்பவன் ஒருவன் இருக்க வேண்டுமே! அந்தக் கயவனக, விலங்காக, நீ இருக்க வேண்டுமா? விலகு, அக் கயமைச் சேற்றிலிருந்து. உண்மையின் ஆழத்திலிருந்து, உள்ளத்தின் துாய்மையிலிருந்து, மணி யோசையென ஒலிக்கட்டும். எது? "பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா' என்னும் பாடல் அழைக்கட்டும், ஒழுக்கபுரிக்கு. கொடுமை எங்கே நிகழ்ந்தாலும், அதைக் கேட்டுக் குமுறுகிறவன் மனிதன். அதைக் கண்டிக்கக் கொதித் தெழுபவன் சாதாரண மனிதன்.