பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பக்கத்திலே நடக்கும் கொடுமையைத்தான் கண்டிப் பேன். அப்பால் நடப்பதைப் பாரேன். அங்கேயுள்ள வர்கள் பார்த்துக்கொள்ளட்டும் அதை' என்று ஒடுங்கிக் இடப்பவன், முழுப் பார்வையில்லாத மனிதன்.

மனித இனம் முழுவதையும் ஒன்முகக் க்ரு துபவன் மாமனிதன். நீக்ரோ, அடிமையாக விற்கப்படும் கொடு மையையும், யூதர் வேட்டையாடும் கொடுரத்தையும் தெரிந்துகொண்டும், மனம் துடிக்காது, தன் வயிறே எல்லாம் என்று கிடப்பவன், எப்படி மனிதன் ஆவான்? பங்களா தேசத்தவர் கற்பழிக்கப்பட்டாலும், வியட் நாம் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டாலும், இங்குள்ள வரும் பொங்கியெழுந்து, உயிர்க்கருணை கொப்பளிக்க முழங்கினேமே, அதுவே மெய்யான மனிதப்பண்பு. பிறிதி னேய் தன்னேய் போலப் போற்றுவதே அறிவின் அடையாளம். அண்மையில், அடுத்துள்ள இலங்கையில் ஈழத்து மக்கள் பட்ட கொடுமைகள், கொஞ்சமா? இழந்த உயிர் கள் எத்தனை? கற்பழிக்கப்பட்ட தாய்மார்களுக்குக் கணக்கு உண்டா? பங்களா தேசத்தில் நடந்த கொடுமைகளைக் கண்டித்து முழங்கியதுபோல், அங்கே நடந்த கொடுமை கலைக் கண்டித்தோமா? * அது அயல் நாட்டு விவலாரம்; அதில் தலையிடக் கூடாது என்று ஆழ்ந்த தவத்தில் மூழ்கிவிடுதல் அரசுக்குப் பொருத்தமாயிருக்கலாம். மக்கள் தலைவர்களும், மனித மனம் படைத்த அறிஞர் களும் அத்தகைய கூண்டுக்குள் புகுந்துகொள்ளலாமா?