பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 தன் உரிமையைக் காக்கப் போராடுதல் நாட்டின் வீரத்திற்கு அறிகுறி. கடல் அலையென்னப் பொங்கி வருகிருர்களே என்று அஞ்சிப் பதுங்குதல், உரிமையுடைய நாட்டிற்கு அவமானம். வழிமறித்தது புலியேயானலும், கையில் இருப்பது முறமேயாயினும், துணிந்து நின்று தாக்கிய பெண்ணன்ருே வீரப்பெண்மணி! - இத்தகைய நிலை, சில மேலைநாடுகளுக்கும் ஏற்படுவது உண்டு. முதல் உலகப்போர் மூண்டது; ஜெர்மனி அதை م. التي لا.L9تnLاع வெறிபிடித்த ஜெர்மனிய அரசு, பன்னடுகளையும் விழுங்கத் திட்டமிட்டது; ஆயத்தஞ் செய்தது; வியத்தகு ஆயத்தத்தோடு புறப்பட்டது. அண்டை நாடுகளைப் படை யெடுக்கப் புறப்பட்டது. வழியிலே சின்னஞ்சிறிய நாடு; அமைதி நாடும் நாடு: பெல்ஜியத்தின் படை, ஜெர்மானியப்படை முன்னே, எம் மாத்திரம் அது. பெல்ஜிய மக்களுக்கும் தெரியும். எலிகளா அவர்கள்? இல்லை. புலியெனப் பாய்ந் தனர்: தடுத்து நிறுத்த முயன்றனர்; தோற்றனர்; ஆயினும் என்ன? . - வீரத்தின் வீச்சை உலகம் கண்டது. பாரதி கண்டார். வாழ்த்தினர். "அறத்தில்ை வீழ்ந்து விட்டாய் திறத்தில்ை எளியை யாகிச் செய்கையால் உயர்ந்து நின்றுய்'