பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

  • ---------...... ஒற்றுமையோடு

தளர்விலாச் சிந்தனை கொளலே பெருமைகொள் வலியாம்' என்று அறிவுறுத்துகிரு.ர். இவ்வுணர்வை நம் இளைஞர்களுக்கு நாம் ஊட்டியிருந்: தால், அவர்களும் மாஜினி இத்தாலிக்கு ஈன்றதுபோன்று, ‘. . . . . . ... எங்கள் பொன்னுயர் காட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச் சுதந்திரம் பூண்டதுவாகி இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக் குடியர சியன்றதாக இலக’ இந்தியாவிற்கு, 'தன்னுடல், பொருளும் ஆவியு மெல்லாம் தத்தமா வழங்கினேன்" என்று முன் நிற்பார்கள். "எங்கள் காட்டொருமை என்ஞடுங் குறிக்கும் இச்சபைத் தலைவரா யிருப்போர் தங்கள் ஆக்கினக ளனைத்தையும் பணிந்து தலைக்கொளற் கென்றுமே கடவேன் இங்கென தாவி மாய்ந்தி டு மேனும் இவர்பணி வெளியிடா , ருப்பேன துங்கமார் செயலாற் போதனையாலும் இயன்றிரு துணையிவர்க் களிப்பேன்" என்று மாஜினி மேற்கொண்ட சபதத்தை, இந்தியர்களும் மேற்கொள்ளப் பக்குவப்படுததவில்லையே! என்செய்வோம்? வீரத்தின் அடையாளம் என்ன? அறைகூவலுக்கு அஞ்சாமை. எதிரி எவ்வளவு வலியானுயினும், அவனுடைய வலி மைக்கு அஞ்சாமை, வீரத்தின் சின்னம்.