பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93.

அருங்கல வாணர் மெய்த்தொண்டர் தங் கள் அறவழி யென்று அேறிந்தாய்: நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை' நெறியினல் இந்தியாவிற்கு . வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து , வையகம் வாழ்கநல்லறத்தே.

தன்ட்ைசி பெற்ற இந்தியா, அமைதி நாடும் நாடு. எனவே, இராணுவக்கூட்டுச் சேரா நாடு.நாடுகளுக்கிடை யில் ஏற்படும் வழக்குகளே, போர்க்களங்களில் அல்லாது கூடிப்பேசித் தீர்த்துக்கொள்ளும் அமைதிக்கொள்கையை ஆதரிக்கும் நாடு. இக்கொள்கையை உருவாக்கியவர் பிரதமர் நேரு. அவ்வுணர்ச்சியை அவரிடம் ஏற்றி வைத்த வர் காந்தியடிகள். மக்கள் இன, பல்துறை வளர்ச்சிகளுக்கும், முன்னேற் றங்களுக்கும், மறுமலர்ச்சிக்கும் மூலவர்களாக விளங்கு வோர் சிலருண்டு. பெருஞ்சுனையாகும் அப்பெரியோர்களின் கருத்துகளும் நெறிகளும் தொண்டுகளும் கண்டு பிடிப்புகளும் மானுடத்தை உருவாக்குகின்றன. *.. அத்தகைய பெரியோர்களாகிய குரு கோவிந்தர், தாதாபாய் நவுரோஜி, திலகர், லஜபதிராய், வ. சி. சிதம் பரனர் ஆகியோரைப்பற்றி, பாரதியார் பாடியுள்ள பாடல் கள், நம் கவனத்திற்குரியன. லஜபதியைப் பற்றிப் பாரதியார் பாடிய இரு பாடல் களேயும், நான் பலமுறை நினைவுகூர்ந்து, உருகி ஆறுதல் பெற்றதுண்டு. வேண்டாதவர்களையெல்லாம் விதம் விதமாகக் கொடுமைப்படுத்தும், இருட்டடிக்கும் தியபோக்கு, தன்