பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லா அவலங்களுக்கும் வருவறை அளவாகும். பாரதி, அவாவின்மை என்றும் முன்னெறியைப் பின் பற்றுகிருர். எனவே வேண்டுதலிண்போதும் காணிநிலத் திடையே பத்துப் பன்னிரெண்டு தெண்ன மரங்களேயே கோருகிருர். இது நமக்கு நல்ல படிப்பினையாகும். ஆசைக்கு அளவிட்டுக்கொண்டு, இயற்கை இன்பத் தையும் இசை இன்பத்தையும் காதல் இன்பத்தையும் கேட்பதில், வெறுக்கAதக்கதோ, குறைக்கத்தக்கதோ ஒன்றும் இல்லை வெட்கப்படாமல் யாரும் வேண்டிக்கூடிய இன்பத்தைப் பாரதியா விரும்புவது எதற்காக? தன்னுடைய சுகத்திற்காக மட்டுமல்ல. இளம்பயிர், நீரை ஏற்பது, தன்னலக்தால் மட்டுமல்ல; வளர்ந்து விளைந்து பயன்படுவதற்காகவும். அதே போல், சுப்ரண்ய பாரதியாரும், ............எங்கள் கூட்டுக் களியிளிலே_கவிதைகள் கொண்டு தரவேணும்' என்று பாரசக்தியை வேண்டுகிருt. எதற்காகக் கவிதை' பிழைப்பதற்காக அல்ல; செல்வத்தைத் திட்டிக் கொள்ள அல்ல. புகழ் மலைக்கு ஏறிப்போகக் குறுக்கு வழி அல்ல. பின் எதற்கு? ...ான்றன் பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தை பாலித்திட வேறும்' என்பது மகாகவி பாரதியாரின் வேண்டுதல். இதுவே அறிவிலும், கருணையிலும் முதிர்ச்சி அடைந்த மணி தருடைய நோக்கமாகும்.