பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லான தலைப்புகள் தனித்தனியே வளர்ந்துவரும் மிகப் பலவாகிய சிறப்புத் துறைகளுக்குரிய முறையில் கவ னம் செலுத்தப்பட்டுக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள் ளன. இவ்வாறு தரத்திலும் திறத்திலும் புதிய களஞ் சியம் பல வகைகளில் மெருகேறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக உலகில் வளர்ந்து வந் துள்ள பல்வேறு அறிவு வளர்ச்சித் துறைகளையும் உள்ளடக்கி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மிகப் பரந்த அளவில் புதிய கலைக்களஞ்சியத்தை உருவாக் கக் கருதியது. அதனைத் தன் பல்வேறு குறிக்கோள் களுள் தலையாயதாகவும் கொண்டது. அதற்கேற்ப மதிப்பிற்குரிய துணைவேந்தரவர்களின் குறிப்பினை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக் கழக ஆட்சிக் குழுவும் நிதிக் குழுவும் களஞ்சியம் உருவாவதற்குரிய இசைவினை 1982மேமாதம் வழங்கின. களஞ்சியத்தை அறிவியல், வாழ்வியல் என்ற இரண்டு தனிப் பிரிவு களில் வெளியிடுவது என்றும், வாழ்வியற் களஞ்சி யத்தை 14 தொகுதிகளில் வெளியிடுவது என்றும் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் களஞ்சிய அலுவலகம் 1983 மார்ச்சு மாதம் சென்னையில் செயற்படத் தொடங்கியது வாழ் வியற் களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராக திரு.அ.வெ.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பல்வேறு வாழ்வியல் துறைகளுக்கும் தகுதியான பதிப்பாசிரியர்களும் செய்தி திரட்டுவோ ரும் தட்டச்சரும் நியமனம் பெற்றனர். முதல் கட்ட மாக வாழ்வியற் களஞ்சியம் 14 தொகுதிகளுக்குமுரிய கட்டுரைகள், சிறு கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவற் றின் தலைப்புகள் ஏறத்தாழ 15000 வரை தயார் செய்யப்பட்டன. இந்நிலையில் வாழ்வியற் களஞ்சி யத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராக நான் 4.4.84 -இல் பொறுப்பேற்றேன். அதன் பின்னர், தலைப்பு களைத் துறை வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு துறை யிலும் தக்க அறிஞர்களைக் கொண்டு வல்லுநர் செய்யப் குழுக்கள் அமைத்துத் தலைப்புகள் ஆய்வு பட்டன. இவ்வாறு ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப் பட்ட தலைப்புகளுள் தலைமைக் கட்டுரைகள், பல் வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பணி யாற்றும் வல்லுநர்களிடமிருந்து பெறப்பட்டன. இவ் வாறு பெற்ற கட்டுரைகள் மீண்டும் ஒருமுறை வல்லு நர் குழுக்கள் மூலம் பொருளாய்வு செய்து முடிவாகச் செப்பம் செய்யப்பட்டன. இவற்றுள், ஒருசில கட்டுரைகளை அச்சிட்டு ஓர் எடுத்துக்காட்டுப் படிவம் 1984 மே மாதத்தில் உரு வாக்கப்பட்டது. இவ்வெடுத்துக்காட்டுப் படிவங் களைத் தமிழகத்திலும், வெளிநாட்டிலும் உள்ள ஏறத்தாழ 700 தமிழறிஞர்களுக்கும், களுக்கும், வல்லுநர்களுக்கும் அனுப்பி அவர்தம் கருத் எழுத்தாளர் vi துகள் அறியப்பட்டன. அக்கருத்துகளின் அடிப்படை யில் இரண்டாம் முறையாக மற்றும் ஓர் எடுத்துக் காட்டுப் படிவம் 1984 சூன் மாதத்தில் அச்சிட்டுக் குறிப்பிடத்தக்க சில அறிஞர்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டது. இந்நிலையில் களஞ்சிய மையம் 20-8-84 முதல் தஞ்சைக்கு மாற்றப்பட்டுச் செயற்படத் தொடங்கி யது. இருமுறை அறிஞர் கருத்து அறிய அனுப்பப் பெற்ற எடுத்துக்காட்டுப் படிவங்களைப் பற்றி வந்த ஆலோசனைகளை மனங்கொண்டு இம்முதல் தொகுதி (அ) இறுதி வடிவம் பெற்று 900 தலைப்புகளில் வெளிவருகிறது.இதனுள் ஆங்காங்குப்பொருத்தமான நிழற்படங்கள், வண்ணப்படங்கள், வரைபடங்கள் முத லியன பெருமளவில் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தொகு திக்குரிய கட்டுரையாளர் பெயர்களின் முன்னெழுத்து களும் முதலெழுத்துகளும் அவர்தம் கட்டுரைகளின் கீழே தரப்பட்டுள்ளன. அவை இல்லாமல் அமைந் துள்ள கட்டுரைகளும் குறிப்புகளும் துறையினரால் எழுதப்பட்டவையாகும். இத்தொகுதிக்குரிய கட்டுரைகள் எல்லாம் தக்க வல்லுநர்களால் இறுதியாக ஆய்வு செய்யப்பட்டுச் செப்பம் பெற்றவை. இத்தொகுதியை உருவாக்குவ தில் கீழ்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன: 1. ஆங்கிலச் சமன்சொற்கள் தரப்பட வேண்டிய தலைப்புகளுக்குக் கட்டுரைத் தலைப்பின் தொடக்கத்தில் அவை தரப்பெறாமல் கட்டுரை யின் உட்பகுதியில் பொருத்தமான இடத்தில் தரப்பெற்றுள்ளன. 2. கட்டுரைகளில் கூடியமட்டில் கிரந்த எழுத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. வேற்றொலிச் சொற்கள் வருமிடங்களில் தமிழ் மரபுக்கேற்ப ஒலி மாற்றம் செய்யப்பட்டது. அதனை விளங்கிக் கொள்ளும் வகையில் ஆங்காங்கு உரிய ஆங்கிலச் சொற்கள் தரப்பட்டுள்ளன. (எ-டு) ஸ்பெயின் - இசுபெயின் (Spain) பாகிஸ்தான் - பாகிசுத்தான் (Pakistan) 3 பிறமொழிச் சொற்கள் வரும்போது தமிழிலக்கண மரபுப்படி சொல்லுக்கு முதலிலும் ஈற்றிலும் வரும் தமிழ் எழுத்துக்கள் ஆளப்பட்டுள்ளன. (எ-டு) ரூபா -உரூபா டாலர்-தாலர் (Dollar) டென்மார்க் தென்மார்க்கு (Denmark) 4. 'கள்' விகுதி சேர்ந்த வன்றொடர்க் குற்றுகரச் சொற்கள் வல்லினம் மிக்கு வரும் விதியினைப் பெறாமல் ஆளப்பட்டுள்ளன. (எ-டு) எழுத்துகள் (எழுத்துக்கள்) கருத்துக்கள் (கருத்துக்கள்)