பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கட்டுரையாளர் பெயர்களில் வரும் முன்னெழுத்து களும் முதலெழுத்துகளும் ஒலி மாற்றம் செய்யா மல் உள்ளவாறே தரப்பெற்றுள்ளன. (எ-டு) ந.ஜெ. (ந.ஜெயபாரதி) 6. கட்டுரைகளின் இறுதியில் துணைநூல்கள் கொடுக் கப்படும்போதும், அவை ஆசிரியர் பெயர், நூற் பெயர், வெளியீட்டகம், ஆண்டு என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 7. கட்டுரைகளில் ஆங்கில ஆண்டுகளைக் குறிப்பிடும் போது. அவை 1900-க்கு முற்பட்டனவாயின், அவற்றிற்கு முன் கி.பி. அல்லது கி.மு. என்னும் சுருக்கக் குறியீடுகள் தரப்பட்டுள்ளன. இந் நூற் றாண்டாயின் அக்குறியீடு இடப்படவில்லை. கட்டுரைகளின் தலைப்புச் சொற்களே எழுவா யாக அமையுமாறு ஒவ்வொரு சுட்டுரையிலும் முதல் வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது. தலைப் பினை எழுவாயாகக் கொண்டு வாக்கியம் தொடங்காத சில இடங்களில் அத்தலைப்பினைத் தந்து அதன் பின்னர் முக்காற்புள்ளி (:) இடப் பெற்றுள்ளது. இத்தொகுதியில் ஆளப்பட்டுள்ள தமிழ்க் கலைச் சொற்களுக்குப் பொருத்தமான ஆங்கிலக் கலைச் சொற்கள் தொகுதியின் இறுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. . 10.பெரும்பாலும், கட்டுரைகளில் சுட்டப்பெற்றுள்ள புள்ளி விவரங்கள் 1984-ஆம் ஆண்டு வரை கிடைத்தவையாகும். சென்னை தமிழ் வளர்ச்சிக் 1947-இல் தொடங்கி 1954-இல் முதல் தொகுதியில் உள்ள வாழ்வியல் தலைப்புகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை இக்கால வளர்ச்சியைப் புலப்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப் பட்டுள்ளன. அன்றியும், ஏறத்தாழ இருமடங்கு புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புதிய களஞ்சி யம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பிரிட்டானிக்கா, அமெரிக்கானா கலைக்களஞ்சியங்கள், சமூகவியல், கல்வியியல் கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தியுள்ளது. . கழகத்தாரால் வெளியிடப்பெற்ற இம்முதல் தொகுதி இவ்வளவு விரைவில் செவ் விய முறையில் வெளிவருதற்கு அனைத்து நிலையிலும் உறுதுணையாக இருந்து வழிகாட்டுபவர் மதிப்பிற் குரிய துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் திரு வ.அய்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி., டி.லிட். அவர்களாவார்கள். தம் பல்வேறு கடமைகளுக்கிடை யில் களஞ்சியப் பணியைக் கண்ணாகக் கருதி ஆலோசனைகளை அவ்வப்போது நேரில் வந்து வழங்கியது டன், வாரந்தோறும் தவறாது அவர்தம் பார்வைக்கு அனுப்பப்படும் கட்டுரைகளை அவர்கள் திருத்தம் செய்தும் உதவினார்கள். அப்பெருந்தகைக்கு எனது உளமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்கி, அஞ்சலி செய்யக் கடமைப்பட்டுள்ளேன். இத்தொகுதி சிறப்பாக வெளிவர என்னுடன் முழு அளவில் ஒத்துழைத்த வாழ்வியற் களஞ்சியப் பதிப்பா சிரியர், செய்தி திரட்டுவோர் ஆகிய அறிஞர்களுக்கு' என் பாராட்டும் நன்றியும் உரிய. எனக்கு முன் தொடக்கத்தில் முதன்மைப் பதிப் பாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த திரு. அ.வெ.சுப் பிரமணியம் அவர்களுக்கும், என்னுடன் ஒத்துழைத்து இடையில் பணி விலகிய கல்வித்துறைப் பதிப்பாசிரியர் டாக்டர் வேதமணி மனுவேல், சட்டத்துறைப் பதிப் பாசிரியர் டாக்டர் இராம. சுப்பிரமணியம், உளவியல் துறைப் பதிப்பாசிரியர் டாக்டர் (திருமதி) சு. சாவித் திரி ஆகியோர்க்கும். செய்தி திரட்டுவோராகப் பணி யாற்றிய செல்வி டாக்டர் சு.மகாலட்சுமி, செல்வி சுபேதாபானு, திருமதி ந.வள்ளியம்மாள், திருவாளர் பா. சந்திரன், செ.கூடலிங்கம், மு. முத்தையன் ஆகி யோர்க்கும் எனது நன்றி உரியது. ஏறத்தாழ 900 தவைப்புகள் கொண்ட இத்தொகு தியின் கட்டுரைகளையும் சிறு கட்டுரைகளையும் குறிப் புகளையும் ஒரு சிறிதும் அயராது பொறுமையுடன் தட்டச்சுச் செய்த தட்டச்சர் அனைவர்க்கும், அலுவ லகக் கண்காணிப்பாளருக்கும், தேரின் கடையாணி போன்ற அடிப்படை ஊழியர் அனைவர்க்கும் எனது பாராட்டு உரியது. இத்தொகுதிக்குக் களஞ்சியத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கட்டுரைகள் எழுதிய அறிஞர்க்கும், ஆய்வுக் குழு வல்லுநர்க்கும், நிழற்படங்கள், வரைபடங்கள் முதலியன உருவாக்கித் தந்த ஓவியர் திரு.தே.நெடுஞ் செழியனுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்புத் துறை, பதிப்புத் துறை அலுவலர்க்கும், நூலகருக்கும் என் நன்றி உரியது. அச்சேற்றித் அச்சக உரிமை இத்தொகுதியை உரிய காலத்தில் தந்த அண்ணாமலைநகர் கே. பி. யாளர் திரு சேரன் அவர்களுக்கும் அச்சகத்தின் பிற பணியாளர்களுக்கும், பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகப் பணியாளர்களுக்கும் எனது நன்றி. தஞ்சாவூர்-5 12.2.86. நா. பாலுசாமி முதன்மைப் பதிப்பாசிரியர்