பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வாழ்வியல் நெறிகள்

என்பது பொருளாகும். பழங்காலத்தில் ஒருவரிடத்தில் மாடுகளைக் கொண்டே அவர்தம் செல்வ வளத்தைக் கணக்கிட்டனர். ஒரு பசுவால் வரும் வருவாயைக் கொண்டு வாழும் வாழ்க்கை புல்லிய வாழ்க்கையெனக் கருதப்பட்டது. இதனை “ஒரான் வல்கிச் சீரில் வாழ்க்கை’ என்ற தொடர் தெரிவிக்கின்றது. ஒரு காட்டின் செல்வம் பசுவெனக் கருதப்பட்டமையால் அரசனின் செல்வக் களஞ்சியம் பசு மங்தைக் கூட்டம் என ஆனது. எனவே அக்காளைய போரின் தொடக்கம் பகைவன் காட்டின் பசு மங்தைத்திரளை ஒர் அரசன் தன் காட்டிற்குக் கவர்ந்து வந்து விடுவதேயாகும் எனக் கருதப்பட்டது. கொடுங்கோல் மன்னன் ஆட்சி செலுத்தும் காட்டில் பசுக்கள் பால் தரமாட்டார் அந்தனர் மறையோதுதலை மறந்து வி டு வ ர்; செங்கோல் வேந்தன் சிறப்புற காட்டைக் காத்தலை விட்டுக் கொடுங்கோல் வேந்தனாகப் போய்விடுவானே யானால் என்று திருக்குறள் குறிப்பிடுகின்றது.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எளின்

-திருக்குறள் : 560

என்று திருக்குறள் மொழிவதனைக் கான ஆநிரையின் சிறப்புப் புலப்படும். போர் எச்சரிக்கை செய்யும் அரசன் முதலாவது பகைவன் காட்டிலுள்ள பசுக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புமாறு ஏற்பாடு செய்துவிடுவான். பசுக்கள், பசுக்களையொத்த பார்ப்ப்ன மாக்கள், மகளிர், கோய்வாய்ப்பட்டோர், திருமணமாகியும் இன்னும் குழந்தைப் பேற்றினைப் பெறாதோா ஆகியோர் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குப் போய் விட ட்டும் என்று அறத்தின் வழி