பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 15

உண்பது நாழி: உடுப்பவை இரண்டே: பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே; செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே துப்புக பலவே

-புறநானூறு : 189

கம் வாழ்க்கையின் குறிக்கோள் பிறருக்கு உதவுவ தாகவே அமைய வேண்டும். அதுதான் சான்றோர் பண்டு கண்ட நெறி; அவ்வாறு ஒருவேளை உதவ முடியாமற் போனாலும் பிறருக்குத் தீங்காவது செய்யாமல் இருத்தலே சிறப்பாகும். அதுவே கல்ல கதிக்கு அழைத்துச் செல்லும் பாங்குடைத்தாகும். இவ்வாறு பேசுபவர் நரிவெரூஉத்தலையார் என்னும் சங்கச் சான்றோர் ஆவர்.

கல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான் எல்லோரும் உவப்பது அன்றியும் கல்லாற்றுப் படுஉம் நெறியும் ஆர் அதுவே

-புறநானூறு 195 6.9

வாழ்க்கையில் இத்தகைய தெளிவைப் பெற்ற வுடன் மனிதன் விரைந்து மேற்கொள்ள வேண்டிய செயல்கள் பலவாகும். உலகியல்உரிமையை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவதென்பது அவற்றுள் ஒன்றாகும்.

‘சேற்றிலே பிறந்து வளர்ந்து வந்திருக்கும் தாமரை மலரில், ஒளி பொருந்திய நூற்றுக்கணக்கான இதழ்கள் ஒரே மாதிரியாகக் காணப்படும். அதுபோல ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியிலே பிறந்து வாழ்ந்தவர்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால், அவர் களிலே புலவர்களுடைய புகழ்ச்சியையும் பாட்டினை