பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 135

பெட ஆப்பிரிக்காவிலுள்ள லிபியாவின் பெரும் பகுதி பாலைவனமாகும். அப்பாலை நிலத்தில் பசுக் தரையொன்று. உண்டு அதன்பெயர் சிவன் என்பது.

கி.மு. 1500 அளவில் வாழ்ந்த மோசே என்பவர் ஏகோவா அருளிய பத்துக் கட்டளைகளை'யும் சிவன் என்னும் மாதத்தில் ஆறாம் நாள் சினாய் மலைமீது ாகின்று மக்களுக்கு எடுத்துக் கூறினார் என்று கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு தெரிவிக் கின்றது.

“ஷன்டோயிஸம்” என்னும் ஜப்பானிய சமயத்தில் இலிங்க வணக்கம் முதன்மையானது. ஜப்பானில் இருந்த பொதுவிடங்களில் இலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டன. ஜப்பானிய அரசாங்க ஆணையால் சென்ற நூற்றாண்டில் அவை அகற்றப்பட்டன.

இந்தியாவில்

நமது இந்தியாவில் சிந்துவெளியில் மிகச் சிறந்த நாகரிகம் விளங்கியிருந்தது என்பது புதைபொருள் ஆராய்ச்சியால் அறியப்பட்ட உண்மையாகும். சிந்து வெளியில் கிடைத்த முத்திரையொன்றில் சிவன்பசுபதி என்பதை உணர்த்தும் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. அங்கு இலிங்கங்களும் கிடைத்துள்ளன. சிந்துவெளி காகரிகம், வேதகால ஆரியர்க்கு முற்பட்டது. எனவே இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்னரே இலிங்க வணக்கம் இருந்தது என்பது தெளி வாகும். இப்புதை பொருள்களைக் கண்ட ஆய்வாளர்