பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வாழ்வியல் நெறிகள்

‘சிறுகட் பெருங் கொலைய மழவிளங்களிறு” என்றும், அஞ்சு கஞ்சக் கரக் கற்பதும்’ என்றும், “ஒருகோட்டு மழக் களிறு’ என்றும் இவர் பிள்ளை யாரைப் பாடியுள்ளார்.

மதுரை மீனாட்சியைச் சங்கம் வளர்ந்திட கின்ற பொலன்கொடி’யாக,'ஒருவன் உள்ளத்தில் அழகொளிர எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமாகக் கண்டு உவக்கின்றார். சோமசுந்தரரைப் பாடும்பொழுது கான் மாடக்கூடலில் அவர் கிகழ்த்திய திருவிளையாடல்களை கயம்படக் குறிப்பர். இவர் சைவராயினும் பிற சமயக் காழ்ப்புக் கொள்ளாதவர் இவர் என்பது, திருமாலை இவர் பழமறைகள் முறையிடப் பைந்தமிழ் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே’ என்றும், கருணை பூத்தலர்ந்த கலைக்கண்ணன்’ என்றும், கொண்டல் மணிவண்ணன்’ என்றும் பாடியிருப்பது கொண்டு அறியலாம்.

ஆயினும் இவர் சைவ சமயத்தில் பெரிதும் கெஞ்சங் தோய்ந்தவர் என்பதனை,

‘மறை முடிவாம் சைவம்

அருட்பெருஞ் சைவம் திவ்வியம் பழுத்த சைவ சித்தாந்தம்’

என்று இவர் பாடியுள்ள தொடர்கள் கொண்டு தெளியலாம்.

“கடவுளைப் பாடுதலே கற்றதன் பயன்’ என்பது குமரகுருபரர் கொண்ட கொள்கை எனலாம். புல

னுணர்வுகளைப் பாடாமல் புலனுணர்வுக்கு அப்பாலாய்: