பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வாழ்வியல் நெறிகள்

சொல்லின்பத்தை விளைவிப்பனவாகிய கருவிகள் அனைத்தும் கம்பீரமாகச் செல்லும் இவருடைய செய்யுள் கடையில் கன்கு. அமைந்துள்ளன; எவ்வகை யாப்பையும் பேராற்றலுடன் அமைக்கும் இம்முனிவருக் குச் சொற்களும் தொடை கயங்களும் சிறிதும் முயற்சியின்றி இயல்பாகவே வந்து அமை கின்றன. வழியெதுகையும் முரண்டொடை யும் அச்செய்யுட்களின் ஒசையைப் பொலி வுறுத்துகின்றன. சந்தத்தை இவர் மிக எளிதில் அமைத்துள்ளாா. விருத்தங்களிலும் வெண்பாவிலும் இவருக்கே உரிய ஓசைகயம் மேம்பட்டு விளங்குகின்றது. அகவல்களிலும் வேறு செய்யுட்களிலும் இ வ. ரு ைட ய க ரு த் து க் க ள் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன.

இனி, டாக்டர் உ. வே. சா. அவர்கள் குறிப்பிட்டுள்ள இக்கருத்துக்களை ஆராய்ந்து காண்போம்.

தமிழ்ப்பற்று

குமரகுருபரர் என்றவுடன் முதற்கண் அவருடைய. அளவிடற்கரிய தமிழ்ப்பற்று விளக்கமுறும். தாம் தம் வாழ்வில் முதன்முதலில் பாடிய கலிவெண்பாவிலேயே,

ஆசுமுதல் காற்கவியும் அட்டாவ தானமும் சீர்ப் பேசுமியல் பல்காப் பியத்தொகையும்-ஓசை எழுத்துமுதலாம்ஐந் திலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாவித்து

-கந்தர் கலிவெண்பா; 118-119.