பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வாழ்வியல் நெறிகள்

படுதல் ஆகிய காரணங்களால், முன்கூறிய பதின்மூன்று மட்டுமே குமரகுருபரர் அருவியவை என முடிவு செய்கிறார் டாக்டர் உ. வே. சா. அவர்கள்

அப்பதின்மூன்றுள்ளும், கைலைக் கலம்பகத்தில் பல செய்யுட்கள் காணப்படவில்லை. காசித்துண்டி விநாயகர் பதிகம் முற்றுமே கிடைக்கவில்லை. முழுமையாகக் கிடைக்கும் பதினோரு பிரபந்தங்களின் வாயிலாகக் குமரகுருபரர் உணர்த்தும் இலக்கியக் கொள்கையைக் காண்போம்.

இலக்கியம் என்ற சொல்லாட்சி

குமரகுருபரர் பிரபந்தங்களிலும் இலக்கியம் என்ற சொல்லாட்சி யாண்டும் காணப்படவில்லை. கவி, கவிதை, பண், பாட்டு, செய்யுள், பனுவல், தமிழ் எனும் சொற்கள் இலக்கியம் எனும் பொருளில்

வழங்கப் பெற்றுள்ளன.

ஆசுமுதற் காற்கவி’ நாடும் கமலேசர் கான்மணிமா லைக்குமிகப் பாடும் கவிதைகலம் பாவிக்கும்’

பண் கண்டளவிற் பணியச் செய்வாய்'7 ‘பாட்டும் பொருளும் பொருளாற்பொருந்தும்பயனும்'8

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வி’ * எழுத்துமுத லாமைக் திலக்கணமும் தோய்ந்து

பழுத்த தமிழ்ப் புலமை’ என வரும் சில தொடர்களில், மேற்கூறிய சொல்லாட்சிகளைக் காணலாம். செய்யுள் என்ற