பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 201

அபிராம வல்லி, கயற்கட் குமாரி, கற்பூர வல்லி, கவுரியர் குலமணி, குமரித் துறையவள், கோமகள், சங்கம் வளர்ந்திட கின்ற பொலன்கொடி, சுந்தரவல்லி, தடாதகாதேவி, பாண்டிப்பிராட்டி, மங்கையர்க்கரசி, மகரத் துவசமுயர்த்த பொலங்கொடி. மதுராபுரித் தலைவி, மதுரைக்கரசு, மதுரைத் துரைமகள், மதுரைப் பெருமாட்டி, மரகதவல்லி, மலயத்துவசன் வளர்த்த பசுங்கிளி, மாணிக்கவல்லி, மும் முலைத் திருவழுதிமகள், வைகைத் துறைவி, வைகைவள காட்டரசு எனப் பல பெயர்களைக் கூறியுள்ளார்.

சோமசுங்தரர்

“சிவபெருமான் அருவம் கான்கு, உருவம் கான்கு, அருவுருவம் ஒன்று என கவந்தருபேதமாகவும், அட்ட மூர்த்தியாகவும் விளங்குகிறான். அவன் எண்குணத் தான் திகம்பரன்,தன் திருச் செவியில்வினை வாசிக்கும் கந்தர்வர்களைக் குழைகளாக அணிந்தவன், சூரிய மண்டலத்திடையே வீற்றிருப்பவன், புவனங்களே திருமேனியாக உடையவன், மலைகளே அவன் புயங்கள், ஆகாயமே திருமேனி, அண்ட கூடமே திருமுடி, பாதலமே பாதம், அவனே மும்மூர்த்தியாக இருந்து முத்தொழிலையும் கடத்துகிறான்’ என சிவபெருமான் தன்மைகளை விவரித்திருக்கிறார்.

மேலும், அங்கம் வெட்டியது, இந்திரன் பழி தீர்த்தது, இறையனாரகப் பொருள் நூலை அருளியது உக்கிரபாண்டியருக்கு வேலளித்தது, உலவாக்

கோட்டையாடியது, கரிக்குருவிக்கு அருள் செய்தது, கல்யானைக்குக் கரும்பருக்தியது, கால் மாறி பாடியது, ஞானசம்பந்தரது ஏடு வைபைபில் எதி சேறச் செய்தது,