பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 வாழ்வியல் நெறிகள்

தருமிக்குப் பொற்கிழி யளித்தது, க ரி ைய ப் பரியாக்கியது, காரைக்கு முத்தி கொடுத்தது, பழியஞ்சியது, பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தது. பாண்டியன் சுரங் திர்த்தது, பாண பத்திர ருக்குப் பலகையிட்டது, பிட்டுண்டது, மண் சுமந்தது, மாபாதகம் தீர்த்தது, மாமிக்குக் கடல் வருவித்தது, யானை யெய்தது, வலை வீசியது, வளை விற்றது, விருத்த குமார பாலரானது, விறகு விற்றது, வெள்ளை யானை சாபந் தீர்த்தது, கடல் வற்ற வேல் விட்டது, மேகத்திற்குத் த ைட யி ட் - து, முதலான சோமசுந்தரரின் மதுரைத் திருவிளையாடல்களையும் குமரகுருபரர் பாடியிருக்கிறார்.

சோமசுந்தரக் க ட வு எளி ன் திருகாமங்களாக அபிடேகச் சொக்கர், அழகிய சொக்கர், கடம்பவனச் சொக்கர், கடம்பவனேசர், கற்பூரச் சொக்கர், கலியான சுந்தரர், சவுந்தரமாறர், சுந்தரர், சொக்கர் பெருமான், பழியஞ்சிமார், புழகுரெய்ச் சொக்கர் ஆகியவற்றைக் கூறியுள்ளார்.

சோமசுந்தரர் சுந்தர பாண்டியராக எழுந்தருளி அரசாண்டவராதலின் அவரைச் சுந்தர மீனவன், சவுந்தர மாறன், கைதவக் களிறு எனப் பாராட்டி உள்ளார்.

பிற கடவுளர்

சைவ சமயக் கடவுளரைப் போற்றிப் பாராட்டும் இவர், திருமால், திருமகள், இந்திரன், இந்திராணி, துர்க்கை, கந்தி, பிரமர், முப்பத்து முக்கோடி தேவர், யமன், வருணன், கலைமகள் முதலான தெய்வங் களையும் உரிய இடங்களில் பரவுகிறார்.