பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வாழ்வியல் நெறிகள்

மாறியும் வரும். அப்போது அது திணை மயக்கம் என்று கூறப்படுகின்றது.

காடும் காடு சார்ந்த பகுதியிலும் நிலவும் சூழலான் தலைவி பிரிவுத்துயரைப் பொறுத்து ஆற்றியிருக்க உதவுகின்றது. குறிஞ்சி நிலமாகிய மலையும் மலை சார்ந்த பகுதியும் ஆள்கடமாட்டம் அதிகம் இல்லாத தாலும் அச்சூழல், மறைவிடம் போல் அமைந்துள்ள செடி கொடி படர்ந்த, பூக்கள் பூத்துக் குலுங்குகின்ற மலைப்பகுதி புணர்ச்சியைத் துரண்டுவதாகவும் அதற்குத் தகுந்த இடமாகவும் அமைகின்றது. மருதத்தின் செழிப்பும் வளமையும் ஊடலை வளர்த்து, பரத்தமைக்கு வழிவகுக்கின்றது. அது போன்றே கடல் சார்ந்த பகுதி இரக்க உணர்ச்சியை அதிகப் படுத்தி, இலக்கியச் சுவையை மிகுவிக்கின்றது. இப்பாகுபாடு உளவியல் அடிப்படையில் அமைந்து விளங்குகின்றதெனலாம்.

கதிர்கை யாக வாங்கி ஞாயிறு பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி விடுவாய்ப் பட்ட வியங்கண் மாநிலம் காடுகளில் எதிரிக் கனைபெயல் பொழிதலின் பொறிவரி யினவண் டார்ப்பப் பலவுடன் நறுவி மல்லையொடு தோன்றி தோன்ற வெறியேன் றன்றே வீகமழ் கானம் எவன் கொல் மற்றுவர் கிலையென மயங்கி இகுபனி உறைக்குங் கண்ணோடிணை பாங்கு இன்னாது உறைவி தொன்னலம் பெறுஉம் இது கற்காலம் காண்டிசின் பகைவர் மதில்முகம் முருக்கிய நொடிசிதை மருப்பிற் கந்துகால் ஒசிக்கும் யானை வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே.

== (அகநானூறு 164)