பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 33

தமிழர்கள் கிலத்தின் இயல்பைக் கொண்டு அவ்வப் பகுதிக்குப் பெயரிட்டனர். ஆற்றோரங்களில் உள்ள ஊர்களுக்கு அவ்வாற்றின் பெயராலும் மலை காட்டில் உள்ள ஊர்களுக்கு அம்மலையின் பெயரையும் வைத்துப் போற்றினர். பெரும்பான்மை ஊரின் பெயரைக் கொண்டே அப்பகுதி கிலத்தின் தன்மையை அறியலாம். சான்றாக, பெருமனல் என்னும் ஊரைக் குறிப்பிடலாம். இப்பெயரை வைத்தே அவ்வூரின் நில, மண் அமைப்பை அறியலாம். டாக்டர் ரா.பி.சேதுப் பிள்ளை தமிழகம்-ஊரும் பேரும் என்னும் தனது நூலில் ஊர்ப் பெயர்ச் செய்திகளை விரிவாக விளக்கிச் செல்கின்றார். தமிழர்கள் கண்ட காங்லப் பகுப்பு அறிவியல் பாங்கானது என்பது தெளிவாகின்றது. தங்களது வாழ்விற்கு அடிப்படையாய் நிலம் அமைக் திருப்பதைத் தமிழர்கள் கன்குணர்ந்திருந்தார்கள் என்பதை இலக்கண, இலக்கிய நூல்கள் தெளிவாக விளக்கி கிற்கின்றன.

பொழுது

மனித வாழ்க்கையின் அடிப்படையாய் நிலம் அமைந்துள்ளதை அறிந்திருந்த பழந்தமிழர்கள் கால கிலைகளும் வாழ்க்கைக்கு இன்றியமையாத கூறாக அமைவதை உணர்ந்தனர். ஒரு காளில் பாதிப் பகுதி பகலாகவும் பாதிப் பகுதி இருளாகவும் இருப்பதை அறிந்து பகல், இரவு என்று பிரித்தனர். பின்னர் அவற்றுள்ளும் பல கிலைமை இருப்பதை அறிந்து அவற்றைக் கூறிட்டு காலை, முற்பகல், பிற்பகல், மாலை, இரவு என்று பகுத்தனர். அகத்திணைக்குரிய முப்பொருளுள் ஒன்றான முதலாவதான முதற்பொருள்