பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

2

வாழ்வியல் ژیهs فه

ஒருகை பள்ளி யொற்றி யொருகை முடியொடு கடகர் சேர்த்தி கெடிதுகினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொள் கோன்விரல் நகைதாழ் கண்ணி கல்வலங் திருத்தி அரசிருங்து பணிக்கும் முரசு முழங்கு பாசறை”

யில் இன்துயில் வதிகின்றமையைக் காட்டுகின்றார்.

இவ்வாறாக முல்லைப்பாட்டு ஆசிரியர் கப்பூத னார் பகைமேற் சென்ற வேந்தனின் பாசறை நிலை யைக்கூறுவதன் மூலம் முல்லைத்திணைக்கு இயைந்த வஞ்சியொழுக்கத்தை விளக்குகின்றார்.

படர்மெலிந்து இரங்கும் தலைமகள்

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து ஆற்று விக்கவும் ஆற்ற மாட்டாதவளாய்ப் பூப்போலுண்கண் புலம்பு முத்துறைக்க கின்ற தலைமகள் அரசிருந்து பணிக்கும் முரசு முழங்குபாசறையில் இன்துயில் வதியுகனைக் காணாது வருந்துகின்ற முல்லை யொழுக்கத்தை மீண்டும் இறுதியில் வற்புறுத்து கின்றார் ஆசிரியர். உருமிடி வானம் இழியவும், வரிகிறப் பாதிரி விடவும், திருவில் விலங்கன்றித் தீம்பெயல் தாழவும் தொடங்கிய கார்காலத்தில் வருவதாகக் கூறிச் சென்ற தலைமகனின் வரவினைக் காணாத தலைமகள் தன் கெஞ்சினை அவன்பாற் போக்கி நிறையழிந்து வருந்துகின்றவள் இவ்வாறு தன் கொழுநன் சொல்லைத் தவறியதாம் எனக் கூறித் தன்னைத் தானே தேற்றியும், கழலும் வளை களைக் கழலாமல் திருத்தியும், மீண்டும் மயங்கியும் கெட்டுயிர்த்தும், அம்பு பாய்ந்த மஞ்ஞையைப் போல் மயங்கி தன்னேக நெகிழ இடஞ்சிறந்துயரிய எழுநிலை