பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி கி. பாலசுப்பிரமணியன் ii

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு

இனம்மென

வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை

-நற்றிணை 214 : 1.3

என்று கற்றினை கவில்கின்றது. எனவே வாழ்வியல் நெறிகளைச் செம்மையாக வைத்துக் கொள்வோர் சோம்பியிருத்தல் தகாது என்பது முதலாவது ஒருவர் கற்க வேண்டிய பாடமாகும்.

இந்த உலகில் ஒருவர் உயிர் வாழ உறுதுணை யாய் அமைவது உணவாகும். எந்த ஒருவருடைய முயற்சியும் உணவைத் தேடுவதிலேயே அமைவ தனைக் காணலாம். எனவேதான் பாரதியார்,

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்; இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்

என்று பாடினார். தவயோதியாம் திருமூலர் யாவர்க்கு

மாம் உண்னும்போது ஒரு கைப்பிடி’ என்றார்.

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்,

பசி என்று வந்தவர்க்குப் புசி என்று ஒருபிடி கொடுத்துப் பாரப்பா

என்றார். தாயுமான தயாபரர்,

யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்

உறங்குவதுமே யல்லால் வேறொன்றறியேன்

பராபரமே

என்றார்.