பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 11 』 * * * É À 100 வாழ்வியல் நெறிகள்

அழுகின்றனர். இதுவரை பெற்றோரிட்ட பெயரும், மற்றோரிட்ட பெயரும், பெற்ற பட்டப் பெயர்களும் ஒருங்கே நீக்கப் பெற்றுப் பினம் என்றே எல்லோரும் அழைக்கும் கிலை வந்தெய்துகின்றது. அம்மட்டோ! சுடுகாட்டிற்குச் சுமந்து சென்று அங்கே சுடலையில் வைத்து இதுகாறும் அரிதின் முயன்று அழகுபடுத்தப் பட்டுக் காக்கப்பட்டு வந்த உடலைத் திக்கிரையாக்கு கிறார்கள். அவ்வாறு உடலுக்குத் தி மூட்டிய உறவி னரும் மற்றோரும் திட்டுப் போக நீரில் மூழ்கிக் குளித்து இறந்தவனைப் பற்றிய நினைப்பையும் ஒழித்து விடுகிறார்கள் என்கிறார் திருமூலர்.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிண மென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி கினைப் பொழிந் தார்களே.

-திருமந்திரம்: 145

எனவே கில்லாமையே நிலைபெற்றிருக்கின்ற இவ்வுலகத்தில் மக்கள் செய்ய வேண்டிய செயல் களைப் புலப்படுத்தி, அவர்கள் வாழ வேண்டிய நெறியினை வகையுற எடுத்தோதுகின்றார் திருமூலர்.

தமிழர் பண்பாட்டின் அடிப்படையே தெய்வம் உண்டு என்று தெளிந்து அதனை வக்தித்து வணங்கு பெது | ஆகும். தெய்வம் உண்டென்றிரு; தெய்வம் ஒன்றென்றிரு’ என்பது தமிழ் வழக்கு. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பது திருமூலர் வாககு.