பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 99 'மாப்பிள்ளை மட்டும்தான் காரில் போவார். நாமெல்லாம் ஸ்லோவா நடந்துதான் போகணும்..." என்றார் அய்யாசாமி. 'இங்கெல்லாம் ரோட்லே எல்லோவாப் போக முடியாதே ஸ்பீடாத்தானே போகணும்..." 'ஜான்வாஸம்னா ஸ்லோவாத்தான் போகணும். ப்ரொைெபஷன் பாருங்க. அதுக்கு நீங்கத்ான் கவர்ன்மெண்டிலே ஸ்பெஷலா பர்மிஷன் வாங்கணும்" என்றார் அம்மாஞ்சி. "ஒ" யு மீன் ப்ரொஸெஷன் தட்இஸ் லைக் ஸ்டேட் டிரைவி! வெரிகுட் ப்ரொஸெ ஷன் எதுவரைக்கும் போகணும்?" 'ஏதாவது ஒரு கோயில்லேருந்து கல்யாண வீட்டுக்குப் போவதுதான் சம்பிரதாயம். இங்கே ஆப்ரஹாம் லிங்கன் மண்டபம் தான் இருக்கு. ஆகையாலே அந்த மண்டபத்திலே போய்க் கொஞ்ச நேரம் காற்றாட உட்கார்ந்து விட்டுத் திரும்பி விடலாம் ' என்றார் அம்மாஞ்சி. - - "ஏன்? ஜெபர்ஸன் மண்டபத்திலே கூட உட்காரலாமே! அந்த இடமும் ரொம்ப அழகாத்தான் இருக்குது' என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள். 'அங்கே வேண்டாம். அது கொஞ்சம் டிஸ்ட்டன்ஸ் அதிகம். அத்தோடு லிங்கன் மண்டபத்திலேருந்து வியூ ஒண்டர்புலா இருக்கும். செர்ரி ட்ரீலெல்லாம் பூத்துக் குலுங்கற அழகு டைட்ஸ் பேஸின் வாடர்லே ரிப்ளெக்ட் ஆறப்போ தேவலோகமாயிருக்கும். ஜான் வாசத்துக்கு என்றே ப்ளான்