பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வாஷிங்டனில் திருமணம் I 'லாஸ்ட்ரி! நீ ஏன் சிரிக்கறே" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'உங்க லேடீஸை வைத்து சுமங்கலிப் பிரார்த்தனை பண்ணக் கூடாது. ஸ்ாடர்டே நைட்டும் கூடாது' என்றார் அம்மாஞ்சி. 'அதென்ன அப்படி? எங்க லேடீஸ் கூடத்தான் நல்லா 'ஃபீஸ்ட் சாப்பிடுவாங்க!' என்றாள் மிஸ் ராக். "சாப்பிடுவா. ஆனால் அவங்களுக்கெல்லாம் புடவை கட்டிக்கத் தெரியாதே! அத்தோடு தாலி கட்டிக் கொண்டிருக்கும் சுமங்கலி லேடீஸ்தான் இதற்கு முக்கியம்' என்றார் அம்மாஞ்சி. "அப்படின்னா சரி; உங்க லேடீஸையே அழைத்துச் செய்துடுங்கோ... தென்?" - 'இருபத்தொன்பதாம் தேதி முகூர்த்தம். அதாவது மாங்கல்ய தாரணம். அன்றைக்கு முதல் நாள் ராத்திரி ஜான்வாசம்' என்றார் அப்பு சாஸ்திரிகள். 'வாட் இஸ் ஜான்வாஸ்?' என்று கேட்டாள் மிஸஸ் ராக். - 'ப்ரைட்க் ரூம் காரில் உட்கார்ந்து ப்ரொலெஷன் போவார். அதுக்கு டாப் இல்லாத கார் ஒண்ணு வேணும். அந்தக் காரில் ஸ்மால் ஸ்மால் சில் ட்ரனெல் லாம் உட்கார்ந்து கொள்ளும். காருக்கு முன்னால் நாதஸ்வரமும், பாண்டு வாத்தியமும் வாசித்துக் கொண்டு போவார்கள். அவங்களோடு ஜெண்ட்ஸ் போவாங்க. காருக்குப் பின்னாலே லேடீஸ் நடந்து போவார்கள்' என்றாள் கேதரின். ‘'எதுக்கு எல்லோரும் நடந்து போகணும் ? எல்லோருக்குமே கார் அரேஞ்ச் பண்ணிட்டாப் போச்சு.