பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 97 யார் வருவாங்க? என்னெல்லாம் நடக்கும்? கொஞ்சம் விவரமாச் சொல்லுங்கோ' என்றாள் மிஸஸ் ராக். "ஃபஸ்ட்லே மேடம், டம்பர்ட்டன் ஒக்ஸ்லேருந்து சம்மர் ஹவுஸ் வரைக்கும் ஆர். ஸ்ட்ரீட் பூராவும் பந்தல் போட்டு முடிக்கனும்!” 'முடிச்சுடு. அதுக்குத்தான் ஹவாயிலேருந்து பந்தலுக்கு வேண்டிய தென்னங் கீத்து, வாழைமரம் எல்லாம் வந்தாச்சே! அத்தோடு ஆர். ஸ்ட்ரீட்லே இருக்கிற ஹவுஸ் பூராவும் காலி பண்ணிக் கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கேன். சரின்னு சொல்லியிருக்காங்க. மேரேஜ் பார்ட்டீஸ் யார் வந்தாலும் இந்தத் தெருவிலேயே இறக்கிடலாம். இந்த ஸ்ட்ரீட்லே டிராஃபிக்கையும் கண்ட்ரோல் பண்ணச் சொல்லிட்டேன். உ.ம்... நெக்ஸ்ட்! அடுத்தாப்போல் என்ன செய்யனும்?" 'அடுத்த வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தணும்' என்றார் அய்யாசாமி. 'சுமங்கலிப் பிரார்த்தனையா? அப்படின்னா?' என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக்பெல்லர். "லேடீஸ்ாக்கு விருந்து நடத்தி பிரார்த்தனை பண்றதுக்கு சுமங்கலிப் பிரார்த்தனைன்னு சொல்றது.' 'அதுக்கு எத்தனை லேடீஸ் தேவைப்படும், சொல்லுங்க. நியூயார்க்லே எனக்குத் தெரிஞ்ச லேடீஸுங்க ரொம் பப் பேர் இருக்காங்க. அவங்களையெல்லாம் வரவழைச்சுடறேன். இல்லாட்டி வாஷிங்டன்லே கவர்ன்மெண்ட் கர்ல்ஸ் இருக்காங்க. ரொம்ப அட்ராக்டிவா இருப்பாங்க. அவங்களை வைத்து நடத்திடலாம். சுமங்கலிப் பிரார்த்தனையை வெள்ளிக் கிழமைதான் நடத்தணுமா? ஸாடர்டே நைட் நடத்தக் கூடாதா?” அம்மாஞ்சி வாத்தியார் சிரித்தார்.