பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ilຄບຄນ ராக்ஃபெல்லருக்குக் கைகால் ஆடவில்லை. 'மேரேஜுக்கு இன்னும் ஸிக்ஸ்டீன் டேஸ்தான் இருக்குது. இதற்குள் எவ்வளவோ ஏற்பாடு செய்தாகணும். பெண்ணும் மாப்பிள்ளையும் வரணும். என் ஃபிரண்ட் ஸ-ம் ரிலேடிவ்ஸாம் வரணும். அவங்களுக்கெல்லாம் ஜாகை ஏற்பாடு செய்தாகணும் ' என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் அந்தச் சீமாட்டி. அப்போது அங்கே வந்த பஞ்சு, “மேடம் மாஸ்ஸ்சூ ஸ்ெட்ஸிலேருந்து இன்றைக்கு ஈவினிங் உங்க ஃபிரண்ட் பெட்டி டேவிஸும் இன்னும் ஐந்தாறு பேரும் வராங்களாம். அவங்களை ரிஸிவ் பண்றத்துக்கு ஏர்போர்ட் போகணும்' என்றான். 'பஞ்ச் எனக்கு டயமே இல்லே. ப்ளீஸ் ! நீயும், லல்லியும் போய் அழைச்சிட்டு வந்துடுங்க. இன்றைக்கு ஈவினிங் நான் மிஸஸ் கென்னடியை மீட் பண்ணி, மேரேஜுக்கு இன்வைட் பண்ணப் போறேன். தயவு செய்து அதுக்கு முன்னாலே இப்ப எல்லோரையும் இங்கே கொஞ்சம் வரச் சொல்லு. மேரேஜைப் பற்றி டிஸ்கஸ்" செய்வோம். எனக்கு ஒரு கம்ப்ளிட் ஐடியா குடுங்க பார்க்கலாம். மொத்தம் எத்தனை பேர் வருவாங்க? யார்