பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வாஷிங்டனில் திருமணம் | போட்டுக் கட்டின மாதிரின்னா இருக்கு லிங்கன் மண்டபம்' என்றார் அம்மாஞ்சி. 'ஒருவேளை இங்கேதான் லிங்கனுக்கு ஜான்வாசம் நடந்ததோ என்னவோ?’ என்றார் சாஸ்திரிகள். 'சாஸ்திரிகளே பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருமய்யா!... காட்டன் ஸார் ஜான்வாசத்தின்போது காஸ் லைட்டுக்கும், நரிக் குறவாளுக்கும் ஏற்பாடு பண்ணி யாச்சா?' என்று கேட்டார் அம்மாஞ்சி. - “காஸ்லைட் வேறே எதுக்கு? வாஷிங்டன்லே இருக்கிற லைட் போதாதா?' என்றாள் மிஸஸ் ராக். “இந்த காஸ் லைட் கூடாது. எங்க ஊர் காஸ்லைட்தான் சம்பிரதாயம்' என்றார் அம்மாஞ்சி. "சம்பிரதாயம்னா வாட் என்று கேட்டாள் மிஸஸ் ராக். - - "கஸ்டம்ஸ்" என்றார் அம்மாஞ்சி. 'கஷ்டம் ஒன்றுமில்லை... ' என்றார் சாஸ்திரிகள். மறுபடியும் அம்மாஞ்சி வாத்தியார் சாஸ்திரிகளின் வாயை அடக்கினார். - 'ஏஜண்ட் பாப்ஜியை டிரங்க் போட்டுக் கூப்பிட்டு, மெட்ராஸிலிருந்து ஆயிரம் காஸ் லைட்ஸ் அனுப்பச் சொல்லியிருக்கேன். நாளைக்குள் வந்துவிடும். நரிக்குறவங்க ஆயிரம் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டப்படும் போல இருக்கு" என்று கூறினான் பஞ்சு. - 'நாரிக்ரூவாஸ்னா அவங்க யாரு?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். - "அவர்கள்தான் தென்னிந்திய காஸ்லைட் கம்பெனி நடத்தற வா. அவாளேதான் காஸ்லைட் தூக்குவா' என்றான் பஞ்சு.