பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 103 'அதென்ன அப்படி? அவங்க இங்கே வரமாட்டாங்களா?' என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'வருவாங்க, இருபத்தொன்பதாம் தேதி ஸெளத் இண்டியாவில் ஏகப்பட்ட முகூரட் அதனாலே அவங்களுக்கு ரொம்ப கிராக்கி...' 'ஆளுக்கு ஆயிரம் டாலர் கொடுத்தாவது அவங்களை வரவழைச்சுடுங்க. காஸ்லைட்துக்கறத்துக்கு வேறே என்ன செய்யறது?’ - 'பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவங்க இங்கே வந்தா நாயெல்லாம் சேர்ந்து கோரஸ்லே குரைக்க ஆரம்பிச்சுடுமே என்றுதான் யோசிக்கிறேன்' என்றான் பஞ்சு. - 'ஏன்? குரைக்கட்டுமே! அதனாலே என்ன ட்ரபிள்? டாக்ஸெல்லாம் சேர்ந்து கோரஸ்லே பார்க் பண்ணா அது ரொம்பத் தமாஷாயிருக்குமே! பஞ்ச்! கண்டிப்பா என் பிரண்ட்ஸ் நாரிக்ரூவாஸைப் பார்க்கறத்துக்கு ரொம்ப லைக் பண்ணுவாங்க. நாரிக்ரூவாஸ் எப்படி இருப்பாங்க பஞ்ச்?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'மகாராஜாஸ் மாதிரி இருப்பாங்க. கழுத்திலே காஸ்ட்லி மணி மாலையெல்லாம் போட்டிருப்பாங்க. தலையிலே டர்பன் கட்டியிருப்பாங்க. தோள் மேலே மங்க்கியும் கையிலே வாக்கிங் ஸ்டிக்கும் வச்சிருப்பாங்க. அவங்களை நாங்க பேவ்மெண்ட் ராஜாஸ்னு சொல்றது' என்றான். பளுசு. - - "லேடி நாரிக்ரூவாஸ் கூட இருப்பாங்களா? அவங் எப்படி இருப்பாங்க?" - 'அவங்க மகாராணி மாதிரி கலர்புலா இருப்பாங்க. டீத்தெல்லாம் டார்க்காயிருக்கும். காதுலே, கழுத்திலே, கையிலே வேல் யு.புல் ஜ் வெல்ஸ் போட்டிருப்பாங்க. முதுகிலே துளி கட்டி, குழந்தையை வெச்சிருப்பாங்க...”