பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வாஷிங்டனில் திருமணம் I 'துளின்னா' 'பெளச் லைக் கங்காரு, கங்காருவுக்கு வயத்திலே துரளி இருக்கும். இவங்களுக்கு முதுகுலே பை' "ஆமாம்! இவங்களைப் பார்த்து டாக்ஸ் ஏன் பார்க் பண்ணுதுங்க?" 'ஜெலஸிதான் மேடம் பொறாமை, பணக்காரங்களைக் கண்டு பொறாமைப் படறது ஏழைங்களுக்கு சகஜம்தானே? இண்டியாவிலே டாக்ஸெல்லாம் ஏழைதானே? அதனாலே, பணக்கார நாரிக்ருவாலைக் கண்டு குலைக்குதுங்க...' 'நாரிக்ரூவாஸ்-க்கு என்ன பிஸினஸ் , ' 'டே டைம்லே நீடில் பிஸினஸ். ஊசி விற்பாங்க. நைட் டைம்வே லைட் துரக்குவாங்க. பேவ்மெண்ட்லேதான் லிவ் பண்ணுவாங்க. டெய்லி டின்னர் சாப்பாடுதான் சாப்பிடுவாங்க.' ‘'எதுக்கு மங்க் கியைத் தோள் மேலே துக்கி வெச்சுக்கறாங்க?" 'தலை மேலே லைட் வைத்துக்கணுமே, அதனாலேதான்.” - ‘'எதுக்கு குரங்கு வளர்க்கிறாங்க?" "நாய்ங்க அவங்களைக் கண்டு பொறாமைப் படறதாலே அவங்க நாய் வளர்க்கிறதில்லை. குரங்கு வளர்ப்பாங்க. குரங்கு அவங்க சொல்றபடி ஆடும்.” 'அது எப்படி?' 'கையிலே கோல் வச்சிருக்காங்களே? ஆடாமல் என்ன செய்யும் கோல் எடுத்தால் குரங்காடும்னு பழமொழியாச்சே!" ... 'ஆமாம்; அவ்வளவு பெரிய பணக்காரங்க எதுக்கு நைட்லே லைட் தூக்கறாங்க?"