பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வாஷிங்டனில் திருமணம் மிஸ்ஸ் ராக்ஃபெல்லரின் நாத்தனார் கேதரின் ஹஸ் பெண்ட் ஹாரி ஹாப் ஸும், கும்பகோணம் டி.கே.மூர்த்தியும் ஒரே ஆபீஸில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் கேதரினுக்கும், மூர்த்தியின் மனைவி லோசனாவுக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு, நாளொரு டிரஸ்ஸும் பொழுதொரு பவுடருமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு சமயம் கேதரினின் நாய் இறந்து போனபோது மிஸஸ் மூர்த்தி மூன்று நாள் தீட்டுக் காத்தாள்! அதைப்போலவே மிஸஸ் மூர்த்தியின் பனாரஸ் பட்டுப் புடவை சாயம் போய்விட்டது என்பதை அறிந்த கேதரின் துக்கம் விசாரிக்க வந்தாள். . . . மிஸஸ் மூர்த்தி அடிக்கடி மெட்ராஸ் ஸ்டேட்டின் அழகு பற்றி கேதரினிடம் அளந்து விடுவாள். "எங்கள் தென்னிந்தியாவில் தென்னை மரங்கள் ரொம்ப ஒசத்தி. நியூயார்க் ஸ்கைஸ்க்ரேப்பர்களைப் போலவே உயரமாயிருக்கும். மரத்தின் உச்சியில் இளநீர்க் காய்கள் இருக்கும். அந்தக் காய்களுக்குள் வாட்டர் இருக்கும். அந்த வாட்டர் ரொம்ப ஸ்வீட்டாயிருக்கும்' என்பாள். 'அப்படியா! அவ்வளவு உயரத்தில் போய் அந்தக் காய்களை எப்படி எடுப்பார்கள்? ஒவ்வொரு மரத்துக்கும் 'லிஃப்ட் இருக்குமா?' என்று வியப்புடன் விசாரிப்பாள் கேதரின். மிலஸ் மூர்த்தி சிரித்துக் கொண்டே, லிஃப்டும் இருக்காது, படிக்கட்டும் இருக்காது. எங்கள் ஊரில் மனிதர்களே மளமளவென்று மரத்தின் உச்சிக்கு ஏறிப் போய்விடுவார்கள்' என்பாள். - "இஸ் இட்? ஒண்டர்ஃபுல் ஆச்சரியமாயிருக்கிறதே!"

  • { { تعمر -

என்பாள் கேதரின்.