பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 11 'நீ ஒரு தடவை மெட்ராஸுக்கு வந்து பாரேன். அதெல்லாம் நேரில்தான் பார்க்க வேண்டும். சொல்லித் தெரியாது' என்றாள் மிஸஸ் மூர்த்தி. 'எனக்கும் மெட்ராஸ்-க்கு வர வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைதான். அதற்கு நீதான் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும்' என்றாள் கேதரின். 'அடுத்த மாதம் என் டாட்டர் வசந்தாவுக்கு டாஞ்சூரில் மேரேஜ். பையனுக்கு டெல்லி செக்ரடேரியட்டில் வேலை... நீ, உன் ஹஸ்பெண்ட், உன் டாட்டர் மூவரும் வந்து விடுங்களேன்' என்றாள் மிஸஸ் மூர்த்தி. 'ஷயூர் ஷ்யூர்' என்றாள் கேதரின். 'டாஞ்சூர் என்றதும், கேதரின் மகள் லோரிட்டாவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவள் வசந்தாவின் மூலமாக டாஞ் சூர் பற்றி ஏற்கனவே நிறையக் கேள்விப் பட்டிருக்கிறாள். டாஞ்சூரில் வீதிகள் ரொம்பக் குறுகலாக இருக்கும். இரண்டு பேர் எதிர் எதிராக வந்துவிட்டால், அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் குனியச் சொல்லிப் ‘பச்சைக் குதிரை' தாண்டிக் கொண்டுதான் போகவேண்டும். 'கிரீன் ஹார்ஸ் ஜம்பிங் பார்ப்பதற்கு ரொம்ப வேடிக்கையாக இருக்கும் டாஞ்சூர் டெம்பிள் வெரி பிக் டெம்பிள் டெம்பிளிலுள்ள புல் வெரி வெரி பிக் கோபுரத்தின் நிழல் கீழே விழாது. தினம் தினம் விழுந்து கொண்டிருந்தால் அதற்கு பலத்த காயம் ஏற்படும் என்பதற்காக சிற்பிகள் அவ்வாறு கட்டியிருக்கிறார்கள். டாஞ்சூர் ஃபிளவர் - பஞ்ச் (கதம்பம்), - கேஷ"நட் (முந்திரிப் பருப்பு), அம்ப்ரல்லா சில்லிஸ் (குடை மிளகாய்), தெருப் புழுதி (ரோட்-டஸ்ட்) எல்லாம் ரொம்ப பேமஸ்! டாஞ்சூர் என்றதும் லோரிட்டாவுக்கு இவ்வளவு விஷயங்களும் ஞாபகத்துக்கு