பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வாஷிங்டனில் திருமணம் |. வந்தன. டாஞ்சூரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒவ்வொரு நாளும் அவள் பிடரியை உந்தித் தள்ளியது. அதனால் இராத் தூக்கம் இல்லாமல் போய் விடவே, பகலிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள். 'வஸண்டா! உன் மேரேஜூக்கு நான் டாஞ்சூர் வரப் போகிறேன். அங்கே கோகனட் ட்ரீ, டெம்பிள் டவர் பார்க்கப் போகிறேன்! ஒரு சாக்லெட் டப்பா நிறைய ரோட்-டஸ்ட் டை அடைத்துக் கொண்டு வரப் போகிறேன். எனக்கு ரோட்-டஸ்ட் என்றால் ரொம்பப் பிடிக்கும். நியூயார்க் ஸிடி ரொம்ப ரொம்ப ஒர்ஸ்ட்! இங்கே ரோட்-டஸ்ட்டே கிடைப்பதில்லை. டாஞ்சூர் ஸிடி தான் ஜாலி!” என்றாள்! மறுநாளே, மூர்த்தி தம் பதியர், தங்கள் மகள் வசந்தாவுடன் கேதரினையும், அவள் குடும்பத்தாரையும் கல்யாணத்துக்கு அழைப்பதற்காக அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர். "நாங்கள் அடுத்த வாரமே மெட்ராஸுக்குப் புறப்படப் போகிறோம். முகூர்த்தத்துக்கு நீங்கள் மூவரும் அவசியம் டாஞ்சூர் வந்துவிட வேண்டும். மெட்ராஸ் ஏர்போர்ட்டி லிருந்து உங்கள் மூவரையும் டாஞ்சூருக்கு அழைத்துச் செல்ல எங்கள் கார் காத்திருக்கும்' என்று கூறி, ஹாரி ஹாப்ஸிடம் முகூர்த்த அட்சதையும், மஞ்சள் நிறக் கல்யாணப் பத்திரிகையும் கொடுத்தார் மூர்த்தி. ஒ எஸ் வித் ப்ளெஷர் என்று சொல்லிக் கொண்டே, ஹாப்ஸ் அந்தச் சிவப்பு நிற அட்சதையில் நாலைந்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அதைக் கண்டபோது மூர்த்தி குடும்பத்தாருக்குச் சிரிப்பு வந்துவிட்டது!