பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 13 'அட்சதையைத் தின்னக் கூடாது. அது மங்களகரமான சின்னம். அதை எங்காவது கண்ணில் படுகிற இடமாக ஒரிடத்தில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதைப் பார்க்கும் போதெல்லாம் கல்யாணம் என்கிற ஞாபகம் வரும். முகூர்த்தத்துக்குப் போக வேண்டும் என்பதை அது நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்' என்றார் மூர்த்தி - 'ஒ, வெரிகுட் ஐடியா' என்றார் ஹாரி ஹாப்ஸ். மிஸ்ஸ் மூர்த்தி குங்குமப் பரணியில் வைத்திருந்த குங்குமத்தைக் கேதரினிடம் நீட்டினாள். கேதரின் அதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள். வசந்தா சரிகை போட்ட பட்டுப் பாவாடையும், தாவணியும் அணிந்து 'அட்ராக் டி' வாயிருந்தாள். லோரிட்டாவுக்கு அந்தப் பாவாடையும், தாவணியும் ரொம்பப் பிடித்திருந்தன. தான் அதை அணிந்துகொள்ள வேண்டுமென்று பிரியப்பட்டாள். "லைஃப்” தோழி லைக் பண்ணும்போது, வசந்தா சும்மா இருப்பாளா? தன்னுடைய பாவாடையையும், தாவணியையும் அவளிடம் கொடுத்துக் கட்டிக் கொள்ளச் சொன்னாள். பதிலுக்கு லோரிட்டாவின் கவுனை வாங்கித் தான் அணிந்து கொண்டாள். பாவாடை தாவணி அணிந்து வந்த லோரிட்டாவுக்கு, வசந்தா சவுரி வைத்துப் பின்னி, பிச்சோடா போட்டு நெற்றியில் குங்குமத்தையும் இட்டாள். 'உன்னைப் பார்த்தால் வெள்ளைக்காரப் பெண்ணாகவே தோன்றவில்லை. நீதான் கல்யாணத்தில் எனக்குத் தோழியாக இருக்க வேண்டும்' என்றாள் வசந்தா. நான் தோளியாக இருக்க வேண்டு \l மென்றால், நாள் ஒன்றுக்கு ஒரு பாஸ்கெட் கமர்கட் தரவேண்டும் எனக்கு என்றாள், லோரிட்டா.