பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வாஷிங்டனில் திருமணம் | 'த்ரீ ஓ கிளாக்குக்கு வராங்க. மேடம் நீங்க ஏர்போர்ட்டுக்கு வர வேண்டாம். உங்களாலே முடியாது. ஏற்கனவே கால் வீங்கிப் போயிருக்கு' என்றான் பஞ்சு. "நோ நோ அதெல்லாம் முடியாது. நான் வரத்தான் போகிறேன். மகாராஜாஸ் வரப்போ ஏர்போர்ட்டுக்குப் போய் ரிஸிவ் பண்றதுதான் மரியாதை. இதுக்காகத்தானே என் ஹஸ் பெண்ட் கூட இரண்டு நாள் முன்னாடியே வந்திருக்கிறார்' என்றாள் மிஸஸ் ராக். 'சரி மேடம்' என்று கூறிவிட்டுச் சென்றான் பஞ்சு. விமான கூடத்திலிருந்து ஜார்ஜ் டவுன் போய்ச் சேருகிற வரை வழியெங்கும் அமெரிக்க மக்கள் பெரும்கூட்டமாகக் கூடி நின்று நாரிக் ரூவாஸின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 'நாரிக்ரூவாஸ் , ஜான்வாஸ் , ஷம்பந்தி ஷண்டய் , 'முகூரட் - இந்த நான்கு அயிட்டங்களையும் காண்பதற் காகப் பல்லாயிரக்கணக்கான பேர் வெளியூர்களிலிருந் தெல்லாம் வந்திருந்தார்கள். - நாரிக்ரூவாஸைக் கண்டால் நாய்கள் குரைக்கும் என்ற செய்திதான் அவ்வளவு பேருடைய ஆவலுக்கும் பரபரப்புக்கும் காரணம்! so 良 િિદ્ધ 3% So ;: 沅 芷战 gos వ్ల : { المصا