பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| - சாவி 129 பஞ்சு நின்ற இடத்தில் நிற்காமல் பறந்து கொண்டிருந்தான். யாருக்கு எது வேண்டுமானாலும் பஞ்சு, பஞ்சு என்றே அவனையே தேடி அலைந்தனர். "பஞ்சு ஸாரை இப்போது தானே சம்மர் ஹவுஸில் பார்த்தேன்!” என்பார் ஒருவர். - 'டம்பர்ட்டன் ஒக்ஸில் மேளக்காரர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாரே என்பார் இன்னொருவர். அங்கே போய்ப் பார்ப்பதற்குள் அவன் வேறொரு இடத்துக்குப் பறந்து விட்டிருப்பான்! . "பஞ்சு என்று ரொம்பப் பொருத்தமாகத்தான் பேர் வைத்திருக்கிறார்கள். பஞ்சாய்ப் பறந்து கொண்டிருக் கிறாரே என்றார் அம்மாஞ்சி. ராக்ஃபெல்லர் மாமிக்கு நடந்து நடந்து கால் வீங்கிவிட்டது. அத்தையும், பாட்டியும் அந்தச் சீமாட்டியின் காலில் விளக்கெண்ணெயைத் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்தபடியே, ‘நீங்க இப்படி அலையக் கூடாது. பஞ்சு இருக்கான். பார்த்துக் கொள்கிறான். உங்க கால் எப்படி வீங்கிப் போச்சு பாருங்க' என்று வருத்தப்பட்டனர். "இப்ப நீங்க என்ன செய்யlங்க?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'எங்களுக்குத் தெரிந்த கை வைத்தியத்தைச் செய் கிறோம்' என்றாள். அத்தை, . கால் வீங்கிப் போயிருக்கப்போ கை வைத்தியம் செய்தால் எப்படி? கால் வைத்தியமாச் செய்யுங்க!” என்றாள் திருமதி ராக்பெல்லர். அப்போதுதான் அந்தப் பக்கமாக வந்தான் பஞ்சு. "பஞ்சு நாரிக்ரூவாஸ் எத்தனை மணிக்கு வராங்க?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். .