பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மணி என்ன? நவார்த்தம் இருக்குமா?’ என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி. 'இங்கிலீஷ் பேசுமய்யா, இது வாஷிங்டன். நவார்த்தமாம், நவார்த்தம் 1 நைன் தர்ட்டி என்று சொல்லுமேன் என்றார் அம்மாஞ்சி. ராக்ஃபெல்லர் மாமி ஆளுக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் வாங்கிக் கொடுத்தால் செளகரியமா யிருக்கும்' என்றார் இன்னொரு சாஸ்திரி. 'நமக்கெல்லாம் வயிற்றிலே கடிகாரம் இருக்கிறபோது தனியாக ரிஸ் ட் வாட்ச் எதற்கு ' என்று கேட்டார் அம்மாஞ்சி. - ஜார்ஜ் டவுனிலே எங்கே பார்த்தாலும் வைதிகர்களும், கல்யாணத்துக்கு வந்துள்ளவர்களும் தான் கண்ணில் பட்டனர். அதைப் பார்த்தபோது, பம்பாயில் உள்ள மாதுங்காவைப் போல் வாஷிங்டனிலும் ஒரு தென்னிந்தியக் காலனி ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. புதுப் பந்தலின் மணமும், நாதஸ்வர இசையும், குழந்தைகளின் கும்மாளமும் சேர்ந்து, முகூர்த்த நாள் நெருங்கிவிட்டதை உணர்த்திக் கொண்டிருந்தன.