பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 127 டயர்ட் அவரை யாரும் தொந்தரவு செய்யாதீங்க. நாளைக் குத்தான் பிரஸ்காரர்களுக்குப் பேட்டி. வழிவிடுங்க” என்று கூறிய மிஸஸ் ராக், மாப்பிள்ளையைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டாள். கார், டம்பர்ட்டன் ஒக்ஸ் வாசலில் போய் நின்றதும் மாமியும், அத்தையும் வெளியே வந்து ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள். மிஸஸ் ராக்ஃபெல்லரும், அவருடைய உறவினர்களும் ஆரத்தி சுற்றுவதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டே கலர்டு வாட்டர் என்றனர். அன்று மாலை வெளியான டெய்லி நியூஸ்', 'ஈவினிங் ஸ்டார் முதலிய பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் பிரசுரமாகியிருந்தன. பிரைட்க்ரூம் அண்ட் பார்ட்டி அரைவ்! ஆர். ஸ்ட்ரீட் பிலி வித் மேரேஜ் பிரபரேஷன்ஸ் தெளஸண்ட்ஸ் ஆப் ஸாஸ்ட்ரீஸ் ரோமிங் அபௌட் வாஷிங்டன்! பிரைட்க்ரும் ஈஸ் ஹேவிங் எ ஸ்மால் மோல் ஆன் தி ரைட் சீக்! 'ஷம்பந்தி ஷண்டய் எக்ஸ்பெக்டட் எனி மோமெண்ட்!