பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வாஷிங்டனில் திருமணம் | "ஓ... எஸ். அதுக்கென்ன, ஏற்பாடு பண்ணிடறேன்.' வைதிகாள் போதுமா? கிருஷ்ணப்ப நாய்க்கன் அக்ரகாரத்திலே இன்னும் கொஞ்சம் பேர் இருக்காங்க. அவாளையும் அனுப்பி வைக்கட்டுமா?" 'போதும் போதும்! இப்பவே இங்கே வைதிகாள் கூட்டம் நிறைஞ்சு போச்சு.' 'சரி; மறுபடியும் நாளைக்குப் பேசுவோம்.' மாப்பிள்ளை வரப் போகிற செய்தி இதற்குள் வாஷிங்டன் முழுவதும் பரவி விடவே, ஏர்போர்ட்டில் ஏகக் கூட்டம் கூடிவிட்டது. பத்திரிகை நிருபர்களும், புகைப் படக்காரர்களும் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். சரியாக ஐந்து மணிக்கு சம்பந்தி விமானங்கள் வந்து நின்றன. நாதஸ்வரக்காரர்கள் சக்கைப் போடு போட்டு, விமான நிலையத்தையே திருவிழாக் கோலமாக்கிக் கொண் டிருந்தனர். விமானத்திலிருந்து மாப் பிள்ளை ராஜ கோபாலன் தான் முதலில் இறங்கி வந்தார். தயாராக வைத்திருந்த மலர் மாலையை எடுத்து மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் கொடுத்தான் பஞ்சு. அந்தச் சீமாட்டி மாலையை வாங்கி மாப்பிள்ளையின் கழுத்தில் போட்டுக் கை குலுக்கியபோது பத்திரிகைக்காரர்கள் படமெடுத்துக் கொண்டனர். மாப்பிள்ளை வெளியே செல்ல முடியாதபடி கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு விடவே, போலீசார் வந்து வழி செய்து கொடுக்க வேண்டியதாயிற்று. - நிருபர்கள் மாப்பிள்ளையைச் சுற்றி நின்றுகொண்டு கேள்வி கேட்கத் தொடங்கவே, 'பிரைட்க்ரூம் ரொம்ப