பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 125 'சூளையா? எதுக்கு?' என்று கேட்டான் பஞ்சு. 'விபூதி சூளை! நாலு நாளாகச் சாண உருண்டைகளை உருட்டி உருட்டிக் காய வைத்துக் கொண்டிருக்கிறாரே, அதையெல்லாம் ஓரிடத்திலே கும்பலாக வைத்து பஸ்மம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆயிரம் வைதிகாளுக்கும் விபூதி சப்ளை செய்யனுமாம். அதுக்காகத்தான்..." என்றார் அய்யாசாமி. 'அவரைக் கூப்பிடு இங்கே! இப்பதானா நேரம் கிடைச்சது அதுக்கு?' என்று அதட்டல் போட்டான் பஞ்சு. "பஞ்சு மெட்ராஸிலேருந்து கால் வந்திருக்கு: பாப்ஜி கூப்பிடுகிறாராம்' என்றார் அய்யாசாமி. பஞ்சு டெலிபோனை எடுத்துப் பேசினான். 'ஹல்லோ! பாப்ஜி பேசறேன்...' 'என்ன பாப்ஜி?” 'சாஸ்திரிகள், நாதஸ்வரக்காரர்கள் எல்லாம் வந்து சேர்ந்தாச்சா?" 'ஒ, இப்பத்தான் வந்தாங்க. ஐந்து மணிக்கு மாப்பிள்ளை வருகிறார். நாளைக்குப் பூ வண்டி வரச்சே வெற்றிலையும், பாக்கும் கொஞ்சம் அதிகமாகவே அனுப்பிவை. நீ இருபத்தெட் டாம் தேதி புறப்பட்டு வருகிறாயா? ராக்ஃபெல்லர் மாமி உன்னிடம் ஸ்பெஷலா சொல்லச் சொன்னா...' - - - - - 'பார்க்கலாம். இருபத்தாறாம் தேதி, இருபத்தேழாம் தேதி இந்த இரண்டு நாளும் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா, டில்லி, கோயம்புத்துர், திருச்சி, மதுரை இந்த ஏழு இடத்திலே ருந்தும் ஸ்பெஷல் விமானங்கள் விடறதுக்கு ஏற்பாடு செய்யணும். இங்கே ஏகப்பட்ட பேர் வாஷிங்டன் வரணும்னு ஆசைப்படறாங்க...' - -