பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வாஷிங்டனில் திருமணம் | 'டயமாச்சு, ஐந்து மணிக்கு எல்லோரும் ஏர்போர்ட் போகணும். மாப்பிள்ளை வரார். நீங்க எல்லோரும் ரெடியா இருங்கோ. இதோ வந்துடறேன்' என்று கூறிவிட்டுக் காரில் ஏறிச் சென்றாள் மிஸஸ் ராக். பெண்டுகள் அவசர அவசரமாக அலங்காரத்தில் ஈடுபடலானார்கள். ஆச்சா, போச்சா?’ என்று குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருந்த பஞ்சு, 'இந்த லேடீஸே இப்படித்தான்; வெளியே புறப்படனும்னா சட்டென்று புறப்பட முடியாது உங்களால்' என்று விரட்டினான். "எல்லோரும் தலை பின்னிக் கொண்டாகிவிட்டது. பூ வந்ததும், புறப்படவேண்டியதுதான்' என்றாள் அத்தை. “பூ வண்டி வந்து அரை மணியாச்சு. தஞ்சாவூர் கதம்பம், மல்லி, முல்லை, ரோஜா, கனகாம்பரம், தாழம்பூ எல்லாம் வந்திருக்கின்றன. வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள். நாலு கூடை புஷ்பங்களை சம்பந்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எல்லாவற்றையும் தீர்த்து விடாதீர்கள், ! என்றான் பஞ்சு. டாஞ்சூர் ஃப்ளவர் பஞ்சைக் கண்டதும் லோரிட்டா வுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அதை ஆசையோடு எடுத்துத் தன் தலையில் சுற்றிக் கொண்டு, 'இன்றைக்கு நைட் வசண்டா வரப் போகிறாள். கமர்கட் கொண்டு வருவாள், என் பாடு ஜாலி!” என்று மகிழ்ச்சி பொங்கத் துள்ளினாள் அவள். . 'டயம் மூணு - நாற்பது; அம் மாஞ்சி எங்கே? நேரமாச்சே வைதிகாளை ரிவnவ் பண்றதுக்கு ஏர் போர்ட்டுக்குப் புறப்பட வேண்டாமா?' என்றான் பஞ்சு. "அம்மாஞ்சியும் சாஸ்திரியும் தோட்டத்திலே சூளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என்றார் அய்யாசாமி.