பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வாஷிங்டனில் திருமணம் | மிஸஸ் ராக்ஃபெல்லரின் முகத்தில் ஈயாடவில்லை. அந்தச் சீமாட்டியின் முகத்தில் விழிப்பதற்கே பஞ்சு வெட்கப்பட்டான். "டோண்ட் ஒர்ரி பஞ்ச் ஒருவேளை நாளைக் குக் குரைத்தாலும் குரைக்கலாம்' என்றாள் மிஸ்ஸ் ராக். 'இந்த ஊர் டாக்ஸ்-சங்க என் மூஞ்சியிலே கரி பூசிட்டுதுங்க மேடம்' என்று தலை குனிந்தான் பஞ்சு. நாய்கள் குரைக்காதது நரிக் குறவர்களுக்கே புதிய அனுபவமாயிருந்தது! தங்களைக் கண்டு ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை என்பதை எண்ணியபோது அவர்களால் அதை நம்பவே முடியவில்லை! 'வாஷிங்டன்லே நாமெல்லாம் நிம்மவியா ஊஷி விக்கலாம். ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை!" என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். பஞ்சு, நரிக்குறத்தி ஒருத்தியை அணுகி, "பாட்டு ஒன்று பாடம் மா! அப்போதாவது இந்த நாய்கள் குறைக்கின்றனவா பார்க்கலாம்' என்றான்.