பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I - சாவி 139 அமுக்கிப் பிடித்துவிட்டார்! ஆனால் அவரால் அதைக் கையில் எடுக்க முடியவில்லை. விரலை எடுத்தால் ஜவ்வரிசி வழுக்கிக் கொண்டு போய்விடும் போல் தோன்றவே, ஜவ்வரிசியை அமுக்கிப் பிடித்தபடியே பக்கத்தில் இருந்தவரிடம் ஹெல்ப் ஹெல்ப்!” என்று கெஞ்சினார். இன்னொரு பிரமுகர் ஜவ்வரிசிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கை வழுக்கி விடவே, தலைகுப்புறக் கவிழ்ந்து இலை மீது விழுந்து விட்டார். மற்றொரு பிரமுகர் குண்டுசியால் ஜவ்வரிசிகளைக் குத்திக் குத்தி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தார். கடைசியில் ஒருவிதமாக எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் குறித்த நேரத்தில் ஜானவாசம் புறப்பட்டது. முதலில் சம்மர் ஹவுஸிலிருந்து பெண்டுகள் வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டனர். ஊதுவத்திகளின் மணமும், புஷ்பங்களின் வாசனையும் சேர்ந்து எல்லோர் இதயத்திலும் வசந்தத்தின் இனிமையை நிரப்பின. லல்லி மிகவும் கவர்ச்சிகரமாக உடை அணிந்து கையில் கற்கண்டுத் தட்டுடன் புறப்பட்டபோது, பஞ்சு அவளை அர்த்த புஷ்டியோடு பார்த்துச் சிரித்தான். வசந்தாவும், லோரிட்டாவும் பகட்டான உடை அணிந்து பட்டாம் பூச்சிகளைப்போல் மிதந்து கொண்டிருந்தார்கள். மனப் பெண் ருக்மிணி, மாடி ஜன்னல் வழியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள். - 'நீயும் வாயேன், ஜானவாசம் பார்க்கலாம்" என்று மணப் பெண்ணை அழைத்தாள் லோரிட்டா. - “அவள் வந்தால் மாப்பிள்ளை வெட்கப்படுவார். அதனால் அவள் வேண்டாம்' என்றாள் விஷயம் தெரிந்த வசந்தா. எல்லோரும் காரில் ஏறிக் கொண்டு. லிங்கன் மண்டபத்தை அடைந்தனர்.