பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வாஷிங்டனில் திருமணம் | 'வடை வெரி ஹார்ட்!” என்றார் ஒருவர். "போலி வெரி ஸாப்ட்!" என்றார் இன்னொருவர். மிஸ்ஸ் ராக்ஃபெல்லரும் கேதரினும் தங்கள் கையாலேயே அப்பளம் பரிமாறினார்கள். அனுபவம் இல்லாததால் பரிமாறும்போது அப்பளங்கள் அவர்கள் கையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அப்பளம் உடையும்போதும், “ஸாரி ஸாரி' என்று சொல்லிக் கொண்டிருந்தாள் மிஸஸ் ராக். 'அபலம் வெரி டெலிகேட் அண்ட் வெரி லைட் என்று லேசாகச் சொன்னார் ஒருவர். 'அது பறந்து போகாமல் இருக்கத்தானே பேப்பர் வெய்ட் மாதிரி ஆமவடை போட்டிருக்கிறார்கள்?' என்றார் வேறொருவர். தொட்டால் உடைந்து விடுமோ என்று அஞ்சி, பலர் அப்பளத்தைத் தொடாமலே வைத்திருந்தனர். 'அப்பளத்தை உடைக்காமல் அப்படியே முழுசாக விழுங்குவது எப்படி?’ என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள் வேறு சிலர். ஹாரி ஹாப்ஸ் முதலில் சாப்பிட்டுக் காண்பித்தார். அவர் எப்படிச் சாப்பிடுகிறார் என்பதைக் கவனித்துக் காப்பி அடித்தனர் மற்றவர்கள். ஜவ்வரிசிப் பாயசம் பரிமாறப்பட்டது. பாயசத்தில் கூட்டம் கூட்டமாக மிதந்த வழவழப்பான ஜவ்வரிசிகளைக் கையில் எடுக்க முடியாமல் திணறினார்கள் பலர். இரண்டு விரல்களால் அவற்றைப் பிடித்துவிட வெகு பாடுபட்டார் ஒருவர். அவை கையில் அகப்படாமல் நழுவிக் கொண்டேயிருந்தன. மற்றொருவர், தம்முடைய ஆள்காட்டி விரலால் ஒரு ஜவ்வரிசியை எப்படியோ