பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 137. சந்து இருக்கிறது. அந்த லேன்லே சின்னதா ஒரு கோயிலைக் கட்டி முடித்துவிட்டால் போகிறது என்றார் அம்மாஞ்சி. - மறுநாளே பிள்ளையாரும் கொத்தனாரும் வந்து சேர்ந்தார்கள். அம்மாஞ்சி குறிப்பிட்ட லவர்ஸ் லேனில் பிள்ளையார் கோயில் ஒன்றையும் கட்டி முடித்தார்கள். சனிக்கிழமை மாலையே நாய்களும் வந்து சேர்ந்துவிட்டன. அவற்றைக் கண்ட பிறகுதான் பஞ்சுவின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் ஒடிச் சென்று, 'நாய்கள் வந்துவிட்டன மேடம் பார்க்கிறீர்களா?' என்று கேட்டான். "ஒ எஸ் ஒ எஸ்! என்று கூறிக்கொண்டே விரைந்தாள் மிஸஸ் ராக். - நரிக்குறவர்களைக் கண்ட நாய்கள் சக்கைப் போடாகக் குரைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட மிஸஸ் ராக், 'பஞ்ச் நெள ஒன்லி ஐ ஆம் ஹாப்பி!' என்றாள். ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழரை மணிக்கே முதல் பந்தி பேர்டத் தொடங்கிவிட்டார்கள். ராக்ஃபெல்லரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் - இவர்களுக்கு மட்டும் ஒரு தனி மாளிகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேதரின் ஹஸ் பண்ட் ஹாரி ஹாப்ஸ், 'தென்னிந்தியர்களைப் போலவே நாமும் வேஷ்டி கட்டிக் கொண்டு மணையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும்' என்று யோசனை கூறினார். ராக்ஃபெல்லர் பிரபு அதை ஆமோதிக்கவே எல்லோரும் வேஷ்டி கட்டிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர் போளி, அப்பளம், ஆமவடை என்று ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன. அமெரிக்க நண்பர்கள் அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து அதிசயப்பட்டனர். ஆமவடை கெட்டியாக இருந்தது.