பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வாஷிங்டனில் திருமணம் | மேற்குப் பக்கம் நடந்தால் லிங்கன் மெமோரியலை அடையலாம். - இந்த ரூட்டில் தான் ஜானவாச ஊர்வலத்தை நடத்துவதற்கு திருமதி ராக்ஃபெல்லர் ஏற்பாடு செய்திருந்தார். ஜான்வாசத்தைக் காண்பதற்காகப் பல பேர் முன் கூட்டியே அந்த ரூட்டில் உள்ள கட்டடங்களில் இடம் பிடித்து வைத்துக் கொண்டார்கள். ஜான்வாச ஊர்வலம் இரவு ஒன்பது மணிக்குப் புறப்படுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. 'சம் பிரதாயப்படி ஒரு கோயிலுக்குப் போகாமல் ஜான்வாசம் புறப்படக் கூடாது' என்றொரு பிரச்சினையைக் கிளப்பினார் பிள்ளைக்கு மாமா. ராக்ஃபெல்லர் பிரபுவைத் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லை என்று அவருக்குக் காலையிலிருந்தே கோபம். அந்தக் கோபத்தை மனத்தில் வைத்துக் கொண்டு அவர் சண்டைக்குக் கால் கொட்டிக் கொண்டிருந்தார். 'இவ் வளவு லேட்டாக இந்தப் பிரச்சினையைக் கிளப்பினால் எப்படி?’ என்று காரமாகவே கேட்டான் பஞ்சு. 'எனக்கு அதெல்லாம் தெரியாது. கோயிலுக்குப் போகாமல் ஜானவாசம் நடக்கக் கூடாது. அவ்வளவுதான்' என்று கூறிவிட்டுப் போய்விட்டார் மாமா. உடனே பஞ்சு, அம்மாஞ்சியை அழைத்து ஆலோசித்தான். 'இதென்ன பிரமாதம்! பாப்ஜிக்கு போன் செய்து fr : # இன்றைக்கே ஒரு பிள்ளையாரை இ யும், கொத்தன்ாரையும் அனுப்பி - வைக்கச் சொல்லுங்கள். டம்பர்ட்டன் ஒக்ஸுக்கு வடக்குப் பக்கத்தில் லவர்ஸ் லேன்னு ஒரு