பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 135 இல்லாத நாய்களைப் பிடித்துக் கொடுக்கச் சொன்னால் கொடுக்கிறார்கள். பணத்தை வீசினால் எல்லாம் நடக்கும். நாய் விற்ற காசு குரைக்குமா என்ன? ' என்றான் பாப்ஜி. 'நாய்கள் குரைக்காதபோது...!" என்றான் பஞ்சு. 'கவலைப்படாதே கண்டிப்பாய் நாளைக்குள் அனுப்பி வைக்கிறேன். இண்டியாவிலிருந்து நாளைக்கு நூறு நாய்கள் வரப் போவதாகப் பிரஸ்காரர்களிடம் சொல்லிவிடு' என்றான் பாப்ஜி. அவ்வளவுதான்; பஞ்சு குதுகலம் தாங்காமல் திருமதி ராக்பெல்லரிடம் ஒடிச் சென்று, "மேடம் நாளைக்கு நூறு நாய்கள் மெட்ராஸிலிருந்து வருகின்றன என்றான். 'அப்படியா? வெரி ஹாப்பி ரொம்ப சந்தோஷம்! ஜான்வாசம் போகிறபோது அந்தந்த ரூட்டிலே அதுங்களை யாராவது பிடிச்சுக்கிட்டு நிக்கறதுக்கு ஏற்பாடு செய்துடு. நாய்களுக்கெல்லாம் என்ன ஆகாரம் போடப் போறே?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'டாக் பிஸ்கட்டுங்க தான்... வேறே என்ன?” 'உங்க ஊர் டாக்ஸ்-சங்களுக்கு வாய் ஸ் எப்படி இருக்கும்?' என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'ரொம்பப் பிரமாதமாயிருக்கும். ஆனால் கொஞ்சம் நாய்ஸா இருக்கும். அவ்வளவுதான்' என்றான் பஞ்சு. ஜார்ஜ் டவுனுக்கும் வாஷிங்டன் கேபிடலுக்கும் இடையே அழகுமிக்க பென்ஸில்வேனியா அவென்யூ செல்கிறது. ஜார்ஜ் டவுனிலிருந்து அந்த அவென்யூ வழியாகச் சென்றால் கான்ஸ் டிட்டியூஷன் அவென்யூ என்னும் கம்பீரமான ராஜபாட்டையைச் சந்திக்கலாம். கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த அவென்யூவில் திரும்பி