பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வாஷிங்டனில் திருமணம் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று. நரிக்குறவர்களை ஒரு வழியாக ஜார்ஜ் டவுனில் கொண்டு போய்ச் சேர்த்தான் பஞ்சு. உள்ளம் சோர்ந்து போயிருந்த அவன் களைப்புத் தீரச் சற்று நேரம் ஒய்வு பெற எண்ணித் தன் அறையில் போய் உட்கார்ந்ததுதான் தாமதம், டெலிபோன் மணி அடித்தது. மெட்ராஸிலிருந்து பாப்ஜி பேசினான். 'என்ன பஞ்சு நரிக்குறவர்கள் வந்து சேர்ந்து விட்டார்களா?' என்று கேட்டான் பாப்ஜி, 'வந்து விட்டார்களடா! ஆனால் நாய்கள்தான் குரைக்கவில்லை. மிஸஸ் ராக்ஃபெல்லர் முகத்தில் விழிக்கவே எனக்கு வெட்கமாகிவிட்டது. நாய்கள் குரைக்கப் போகிற தமாஷைப் பற்றி அவர் தம்முடைய சிநேகிதர்கள், உறவினர்களிடமெல்லாம் சொல்லிக் சொல்லி பெருமை அடித்துக் கொண்டிருந்தார். பாவம்| அவர்களுக்கெல்லாம் இப்போது பெரிய ஏமாற்றம்! என்னைப் பற்றி பேப்பர்லே வேறு போட்டுவிட்டார்கள்!" என்று அழமாட்டாக் குறையாகச் சொன்னான் பஞ்சு. “ஒரு நாய் கூடவா குரைக்கல்லே?" என்று வியப்புடன் கேட்டான் பாப்.ஜி. “சாதாரணமாக் குரைக்கிற நாய்கூட நரிக்குறவர்களைக் கண்டதும் வாயடைத்துப் போய் விட்டன" என்று வருத்தத்துடன் கூறினான் பஞ்சு. 'கவலைப்படாதே; இங்கிருந்து நாளைக்கே நூறு நாய்களைப் பிடிச்சு ப்ளேன்லே அனுப்பி வைக்கிறேன்" என்று உறுதி கூறினான் பாப்ஜி. 'சேர்ந்தாற் போல் நூறு நாய்களுக்கு நீ என்னடா செய்வாய்?" என்று கேட்டான் பஞ்சு. நாய்களுக்குத் தானா இங்கே பஞ்சம் ? கார்ப்பொரேஷனுக்குப் போன் செய்து லைசென்ஸ்