பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 149 அவர் முகத்தில் காணப்பட்ட மைப் புள்ளிகளைக் கண்ட அமெரிக்க நண்பர்கள், பிக் மோல்ஸ்' என்றனர். “ப்ரைட்க்ரூம் எங்கே போகிறார்?' என்று கேட்டார் அமெரிக்க நண்பர் ஒருவர். 'பனாரஸ்!” என்றான் பஞ்சு. 'மாப்பிள்ளைக்கு என்ன கோபம்? அங்கிள் ஸாம் தூண்டி விட்டுக் காசிக்கு அனுப்புகிறாரோ?' என்று சந்தேகப்பட்டனர் சிலர். - 'பனாரஸ் இண்டியாவில் அல்லவா இருக்கிறது. அவ்வளவு தூரம் எப்படிச் செல்லப் போகிறார்? விமானத்திலே போய் வரட்டுமே" என்றார் இன்னொரு நண்பர். - 'மாப்பிள்ளை பனாரஸ் போனால் நீங்கள் கட்டிக் கொண்டிருப்பதுபோல எனக்கும் ஒரு புடவை வாங்கி வரச் சொல்ல முடியுமா?’ என்று மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் அவருடைய சிநேகிதி ஒருத்தி கேட்டார். - ப்ரைட்க் ரூம் பனாரஸ் டுர் போவதைப் பார்க்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகக் காத்திருந்தனர். பத்திரிகைக்காரர்கள் மாப்பிள்ளை கோபித்துக் கொண்டு செல்லும் காட்சியைப் படமெடுத்துப் போட்டு 'ப்ரைட்க்ரூம் லெப்ட் பார் பனாரஸ்!’ ‘பாத யாத்ரா லைக் வினோபாஜி: அன்வில்லிங் டு மேரி ருக்கு: எலிச்சுவேஷன் வெளி க்ளுமி: என்று எழுதியிருந்தனர். அந்தச் செய்தியைக் கண்ட அமெரிக்க மக்கள் பரபரப்படைந்து, 'ஒருவேளை கல்யாணமே நடக்காமல் போய்விடுமோ?’ என்ற கவலையில் ஆழ்ந்தனர். * . . .” - *